குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களை விரைந்து எதிர்கொண்டதற்காக ஆசிரியர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்
Posted On:
05 SEP 2020 3:04PM by PIB Chennai
சிறப்பாகச் செயலாற்றும் உணர்வுக்குப் புத்தாக்கம் அளிக்க வேண்டுமென்றும், சராசரியாக செயலாற்றுவதை நாம் என்றும் அனுமதிக்கக் கூடாதென்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு இன்று கூறினார்.
ஆசிரியர்கள் தினத்தன்று தனது கருத்துகளை முகநூல் பதிவொன்றில் பகிர்ந்த அவர், உலகத்துகே ஆசிரியராக ஒரு காலத்தில் இந்தியா விளங்கியதாகவும், உலகக் கற்றலுக்கு பெருமளவில் பங்களித்ததாகவும் தெரிவித்தார்.
பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களை விரைந்து எதிர்கொண்டதற்காக ஆசிரியர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்பை நாம் போற்ற வேண்டும் என்று திரு.நாயுடு கூறினார்.
வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பதும், அனைத்தில் இருந்தும் சிறந்தவற்றை கிரகித்துக் கொள்வதும் இந்தியாவின் அணுகுமுறை என்று கூறிய அவர், பழங்காலத்தில் இருந்தே கற்பித்தலை மிகவும் புனிதமானத் தொழிலாக இந்தியா கருதி வருவதாகக் கூறினார்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான இன்று, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651551
(Release ID: 1651608)
Visitor Counter : 150