பாதுகாப்பு அமைச்சகம்
விமானப் போர் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளிடையே விமானப்படையின் தலைமை தளபதி உரையாற்றினார்
Posted On:
04 SEP 2020 2:11PM by PIB Chennai
விமானப் போர் பயிற்சி கல்லூரியை விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, செப்டம்பர் 3 அன்று வருகை தந்து பார்வையிட்டார்.
இந்திய விமானப்படையின் உயர்கல்வி நிறுவனமான செகந்தராபாத்தில் உள்ள விமானப் போர் பயிற்சி கல்லூரி, 1959-இல் இருந்து செயல்பட்டு வருகிறது. விமானப் போர் பயிற்சியை முப்படை அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் இது அளிக்கிறது.
விமானப் போர் பயிற்சி கல்லூரியை பார்வையிட்ட விமானப்படையின் தலைமை தளபதி, 44-வது உயரிய விமான செயல்பாட்டு பயிற்சியை ((HACC) மேற்கொண்டு வரும் முப்படைகளின் அதிகாரிகளிடையே உரையாற்றினார்.
- பாதுகாப்பின் புதிய சவால்களைப் பற்றி அவர்களிடைய உரையாற்றிய அவர், விமானப்படையின் சிறப்பியல்புகளைப் பற்றியும், வருங்கால போர் புரிதலில் ஒருங்கிணைந்த அமைப்புகளை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651247
********
(Release ID: 1651306)
Visitor Counter : 159