பாதுகாப்பு அமைச்சகம்

இந்திரா நேவி – 20

Posted On: 04 SEP 2020 12:46PM by PIB Chennai

இந்திய மற்றும் ரஷ்ய கடற்படைகளுக்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இருதரப்பு கடல் பயிற்சியான இந்திரா நேவியின் 11-வது பதிப்பு, 4 முதல் 5 செப்டம்பர், 2020 வரை வங்கக் கடலில் நடக்கிறது.

 

2003-இல் தொடங்கப்பட்ட இந்திரா நேவி, இரு கடற்படைகளுக்கிடையேயான நீண்டகால உறவை வெளிப்படுத்துகிறது. வங்கக்கடலில் இந்தப் பயிற்சி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், மாண்புமிகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர், ஜெனரல் செர்ஜெய் ஷோய்குவின் அழைப்பின் பேரில் 3 செப்டம்பர், 2020 முதல் மாஸ்கோ பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

 

இரண்டாம் உலகப் போரின் 75வது ஆண்டைக் குறிக்கும் விதமாகவும், இருதரப்பு ஒத்துழைப்பு சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும் பாதுகாப்பு அமைச்சரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

 

இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையே பல வருடங்களாக கட்டமைக்கப்பட்ட உறவை மேலும் ஒருங்கிணைப்பதே இந்திரா நேவி-20-இன் முக்கிய நோக்கம் ஆகும். கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, நேரடி தொடர்பில்லாத, கடலில் மட்டுமே நடத்தக்கூடிய பயிற்சியாக இந்திரா நேவி-20 வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651225

*********



(Release ID: 1651301) Visitor Counter : 196