வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

மெட்ரோ ரயில் இயக்கத்தை செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தொடங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 02 SEP 2020 6:56PM by PIB Chennai

மெட்ரோ ரயில் இயக்கத்தை செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தொடங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி ஊடக சந்திப்பொன்றின் போது இன்று வெளியிட்டார்

 

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தால்  ஒப்புதல் அளிக்கப்பட்டவை ஆகும்.

 

சில விரிவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

 

அ. மெட்ரோ ரயில் இயக்கம் செப்டம்பர் 7-ஆம் தேதியில் இருந்து படிப்படியாகத் தொடங்கி, செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். பயணிகள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ரயில்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும்.

 

ஆ. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நிலையங்களின் உள்ளே வரும்/வெளியே செல்லும் வழிகள் மூடப்பட்டிருக்கும்.

 

இ. சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, நிலையங்களுக்குள்ளும், ரயில்களுக்கு உள்ளும் தேவையான குறியீடுகள் வரையப்பட்டிருக்கும்.

 

ஈ. அனைத்து பயணிகளும், பணியாளர்களும் முகக் கவசங்களைக் கட்டாயமாக அணிய வேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650731 

 

***

MBS/GB

 


(रिलीज़ आईडी: 1650750) आगंतुक पटल : 326
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Kannada , Manipuri , Marathi , Assamese , Bengali , Urdu , हिन्दी , Punjabi