வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய – அமெரிக்க வர்த்தகத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் - திரு.பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 01 SEP 2020 7:49PM by PIB Chennai

இந்திய – அமெரிக்க இருதரப்பு வர்த்தகத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் கூறியுள்ளார். இதற்காக இந்திய தொழில் துறையினருடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்க வர்த்தகத் தொழில் துறைக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாட்டில், காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய போது, இரண்டு ஜனநாயக நாடுகளும், அரசு, தொழில் துறை மற்றும் மக்களுக்கு இடையேயான பல்வேறு மட்டங்களில் ஒருவருக்கொருவர் உதவ உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். இரண்டு நாடுகளும் நியாயமான, சுதந்திரமாக வர்த்தகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இரண்டு நாடுகளும் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக விளங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650449


                                                                          *****


(रिलीज़ आईडी: 1650610) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Telugu