பிரதமர் அலுவலகம்

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

Posted On: 31 AUG 2020 6:45PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர்  திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரவித்துள்ளார்.

‘’பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜியின் மறைவால் இந்தியா துயருற்றுள்ளது. நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழிக்க முடியாத முத்திரையை அவர் பதித்துச் சென்றுள்ளார்.  இணையற்ற அறிஞரும், உயர்ந்த ராஜதந்திரியும் ஆன அவர், அரசியல் வேறுபாடு இன்றி அனைவராலும், அனைத்து சமுதாயத்தினராலும் போற்றப்பட்டவர்’’, என்று பிரதமர் கூறியுள்ளார்.

பல ஆண்டு காலம் நீடித்த அவரது அரசியல் வாழ்க்கையில், திரு. பிரணாப் முகர்ஜி, முக்கியமான பொருளாதார, பாதுகாப்பு அமைச்சகங்களில் நீண்ட நெடிய பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்த அவர், எப்போதும் தயார் நிலையில், தெளிவான உச்சரிப்புடன் அதேசமயம் நகைச்சுவையுடனும் உரையாற்றுவதில் வல்லவர்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக திரு. பிரணாப் முகர்ஜி இருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் மாற்றியிருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையை அவர், கற்கும் இடமாகவும், புதுமை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் இலக்கிய மையமாகவும் மாற்றியிருந்தார். முக்கியமான கொள்கை விஷயங்களில், அவரது அறிவாற்றல் மிக்க ஆலோசனைகளை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.

2014-ஆம் ஆண்டில், தில்லிக்கு நான் புதியவன். முதல் நாளிலிருந்து, திரு. பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஆசியால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன். அவருடனான கலந்துரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், நாடு முழுவதும் உள்ள அபிமானிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!

 பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜியின் மறைவால் இந்தியா துயருற்றுள்ளது. நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அவர் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்து சென்றுள்ளார்.  இணையற்ற அறிஞரும், உயர்ந்த ராஜதந்திரியும் ஆன அவர், அரசியல் வேறுபாடு இன்றி அனைவராலும், அனைத்து சமுதாயத்தினராலும் போற்றப்பட்டவர் pic.twitter.com/gz6rwQbxi6

— நரேந்திர மோடி (@narendramodi) ஆகஸ்ட் 31, 2020


(Release ID: 1650175) Visitor Counter : 260