மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய பெட்ரோலியம் , இயற்கை வாயு, உருக்குத் துறை அமைச்சர் இணைந்து ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் மூன்று நிரந்தரக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர்

Posted On: 29 AUG 2020 5:16PM by PIB Chennai

ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் 12-வது நிறுவன தினம் இன்று மெய்நிகர் நிகழ்வில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மூன்று நிரந்தரக் கட்டடங்களுக்கான அடிக்கல்லை, மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ , மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு, உருக்குத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோர் இணைந்து நாட்டினர்.

திரு. பொக்ரியால் தமது உரையில், சில ஆண்டுகளிலேயே ,இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தைப் பாராட்டினார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்திலும், மன உளைச்சலில் சிக்கி தவித்த ஏராளமான மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் உதவும் பரோசா திட்டத்தை தொடங்கியதற்காக ஒடிசா மத்தியப் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.  வீடு சார்ந்த திறந்த புத்தகத் தேர்வு முறையை வெற்றிகரமாக நடத்திய பல்கலைக்கழகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

திரு. தர்மேந்திர பிரதான் தமது உரையில், சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவக்கூடிய, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி விளக்கினார். ஒடிசா மத்திய பல்கலைக்கழகம், தெற்கு ஒடிசாவின் முக்கிய கல்வி நிறுவனமாக திகழ்கிறது என்றும், இந்தப் பகுதியில் கல்வி மேம்பாட்டிற்கு திருப்திகரமான பணியை அது செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். இருப்பினும், மேலும் பெரிய உச்சங்களை எட்ட, மேலும் அதிகமான கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.



(Release ID: 1649572) Visitor Counter : 119