உள்துறை அமைச்சகம்

பத்ம விருதுகள் 2021விருதுகளுக்கு 15 செப்டம்பர் 2020 வரை நியமனம் செய்யலாம்

Posted On: 28 AUG 2020 6:13PM by PIB Chennai

2021ஆம் ஆண்டு குடியரசு தின விழான்று அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கு நியமனங்கள் / பரிந்துரைகள் இணையவழியில் செய்வது 1 மே 2020 அன்று முதல் தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான நியமனம் செய்வதற்கான இறுதி தேதி 15 செப்டம்பர் 2020. பத்ம விருதுகளுக்கான நியமனங்கள் /பரிந்துரைகள் இணைய வழி மூலமாக மட்டுமே பத்ம விருதுகள் இணையதளத்தின் மூலமாக https://padmaawards.gov.in . பெறப்படும். இதுவரை 8035 பதிவுகள் இந்த இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன இவற்றில் 6361 நியமனங்கள்/ பரிந்துரைகள் முற்றிலும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. விருதுகள் தொடர்பான விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mha.gov.in ) விருதுகள் பதக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் உள்ள விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் பற்றிய விவரங்களை https://padmaawards.gov.in/AboutAwards.aspx

ணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

 

 

*****(Release ID: 1649517) Visitor Counter : 139