பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் இதுவரை எண்ணெய் இயற்கை வாயு பிரிவில் 5.88 லட்சம் கோடி ரூபாய் செலவிலான 8363 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன

Posted On: 25 AUG 2020 6:20PM by PIB Chennai

20.04.2020 முதல் இதுவரை 5.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8363 பொருளாதாரச் செயல்பாடுகள், திட்டங்கள் எண்ணெய் எரிவாயுத் துறையில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. இந்த அனைத்துத் திட்டங்களிலும், பெருந்தொற்று நோய் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

 

எண்ணெய் எரிவாயுத் துறையின் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள்/ கூட்டு முயற்சிகள், துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டங்கள், பயோ எண்ணெய் சுத்திகரிப்பு திட்டங்கள், &பி (E & P) திட்டங்கள், கட்டமைப்புத் திட்டங்களை சந்தைப்படுத்துதல், பைப்லைன் திட்டங்கள், சி ஜி டி திட்டங்கள், துளையிடும் பணிகள் ஆய்வுப்பணிகள் போன்றவை உட்பட பல பணிகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெய் எரிவாயுத் துறையில் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டு முயற்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் 25 முக்கியத் திட்டங்கள் பற்றிய விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. திட்டங்களுக்காக 7861 கோடி முதலீட்டுச் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதனால் 7656825 மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் 167248 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பெட்ரோலியம் இயற்கை வாயு ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களுடன் மிக ஆழமாஅனைத்துத் திட்டங்கள் குறித்தும் தொடர்ந்து பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் 24.8.2020 அன்று கூட்டம் நடைபெற்றது. அமைச்சரின் பார்வையில் பெட்ரோலியத்துறை நெருக்கடி நிலையை வாய்ப்பாக மாற்றிக் கொண்டுள்ளது. இத்துறை இயக்க ரீதியில் செயல்பட்டு, வேலைவாய்ப்பை உருவாக்குவது; மீண்டும் வளர்ச்சி கொண்டு வருதல்; ஆகியவற்றுக்காகப் பாடுபட்டு வருகிறது. பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள், போர்க்கால அடிப்படையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எண்ணெய் எரிவாயு தொழில்துறை பின்தங்கி இருக்கும் நிலைகளையும் முன்னேறிச் செல்ல வேண்டிய நிலைகளையும் இணைத்து ஆற்றி வரும் பணிகள் முன்னேறி வருவது இதைத் தெளிவுபடுத்துகிறது. எண்ணெய், வாயுத்துறை பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். எனவே இத்திட்டங்கள் தேசியப் பொருளாதாரத்தை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை அதிகரித்து, சரக்குகளின் போக்குவரத்தையும் அதிகரிக்கும்.

 

இந்தத் திட்டங்களுக்கா செலவினமாக் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்தத் தொகையில், சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய் மூலதனச் செலவு 2020-21 நிதியாண்டில் செலவிடப்படும்.2020-21 நிதி ஆண்டில் (15.8.2020 தேதின்றுள்ள நிலவரப்படி) ஏற்கனவே 26526 கோடி ரூபாய் மூலதனச் செலவினமாகச் செலவிடப்பட்டு விட்டது. மேலும் 2020- 21 நிதி ஆண்டில் (15.8.2020 தேதின்றுள்ள நிலவரப்படி) இந்தக் காலகட்டத்தில், தொழிலாளர் கணக்குக்கு செலுத்தப்பட்ட தொகை 3258 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த 8363 திட்டங்கள் முடிவடைவதற்குள் 33.8 கோடி மனித வேலை நாட்கள் (நேரடி/ மறைமுக வேலைவாய்ப்பு) உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 9.76 கோடி மனித வேலை நாட்கள் 2020-21 நிதியாண்டிலேயே உருவாக்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில் (15.8.2020 தேதி அன்று உள்ள நிலவரப்படி) 2.2 கோடிக்கும் அதிகமான மனித வேலை நாட்கள் மூலதனச் செலவினம் மூலமாக இந்த எண்ணெய் எரிவாயு திட்டங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

2020-21 நிதி ஆண்டில் வேலைவாய்ப்பு சார்ந்த இயக்கச் செலவினமாக 41672 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 11296 கோடி ரூபாய் ஏற்கனவே செலவிடப்பட்டு விட்டது. இந்த 41672 கோடி ரூபாய் இயக்கச் செலவினம் மூலம்,14.5 கோடி மனித வேலை நாட்கள் (நேரடி/ மறைமுக) உருவாக்க முடியும். 2020 -21 நிதி ஆண்டில் (15.8.2020 தேதியன்று உள்ள நிலவரப்படி) நேரடி / மறைமுக வேலைவாய்ப்பு சுமார் 4.4 கோடி மனித வேலை நாட்களாக இருந்தது.வை இயக்க செலவினம் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

 

2020- 21 நிதி ஆண்டில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மூலமாக 1.62 லட்சம் கோடி ரூபாய் (மூலதனச் செலவினம்/ வேலைவாய்ப்பு உருவாக்கக் கூடிய இயக்கச் செலவினம்) செலவிடப்படும். இதனால் 24 கோடி மனித வேலை நாட்கள் (நேரடி/ மறைமுக) உருவாக்கப்படும். இவ்வாறு செலவிடப்படும் தொகை காரணமாக, முதலீட்டுச் சுழற்சி ஏற்படும். இதனால் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் புதுப்பிக்கப்படும். இதனால் நம் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

 

 

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001XE2J.png

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002VJGQ.jpg

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image003GM1M.jpg

 

*********

 


(Release ID: 1648604) Visitor Counter : 248