கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியத் துறைமுகங்கள் மற்றும் சிறப்பு விமானங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியாளர் மாறுதல்களுக்கு கப்பல் அமைச்சகம் வசதி ஏற்படுத்தியது
Posted On:
25 AUG 2020 3:26PM by PIB Chennai
இந்தியத் துறைமுகங்களிலும் மற்றும் சிறப்பு விமானங்களின் மூலமும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியாளர் மாறுதல்களுக்கு கப்பல் அமைச்சகம் வசதி ஏற்படுத்தியது. இது தான் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையிலான பணி மாறுதல்கள் ஆகும். ஒரு கப்பலின் பணியாளர்களை மற்றொரு குழுவினர் மூலம் மாற்றும் பணியாளர் மாறுதல் என்பது, கப்பல் செயல்முறைகளின் உள்ளே நுழைதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
குறிப்பாக சிக்கித்தவிக்கும் கடலோடிகளை இந்தக் கடினமான காலத்தில் மீட்பதற்கான தொடர் முயற்சிகளுக்காக கப்பல் தலைமை இயக்குநரகத்தை மத்திய கப்பல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. மன்சுக் மாண்டாவியா பாராட்டினார். மாலுமிகளின் வசதிக்காக திறன்வாய்ந்த குறை தீர்ப்புச் செயல்முறையை உருவாக்குமாறு கப்பல் தலைமை இயக்குநரகத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்தக் கடினமான காலத்தில் கடலோடிகள் அமைச்சகத்தை எளிதில் அணுகுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்திய அவர், எந்தவொரு மாலுமியும் திறனில்லாத குறை தீர்ப்பு செயல்முறையினால் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்தார்.
*****
(Release ID: 1648521)
Visitor Counter : 207