ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பெங்கால் ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம், ஒரே நாளில் 51,960 பினாயில் பாட்டில்களை உற்பத்தி செய்த சாதனை
प्रविष्टि तिथि:
25 AUG 2020 1:09PM by PIB Chennai
மத்திய ரசாயனங்கள் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பெங்கால் ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம், ஒரே நாளில் 51,960 பினாயில் பாட்டில்களை உற்பத்தி செய்த இதுவரை எட்டியிராத சாதனையைச் செய்துள்ளது. வடக்கு 24 பர்கானாவில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை இச்சாதனையைப் புரிந்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனைக்காக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா, தொழிற்சாலை நிர்வாகத்தையும், பணியாளர்களையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1648473)
आगंतुक पटल : 230