சுற்றுலா அமைச்சகம்

நமது தேசத்தைப் பாருங்கள் தொடரில் ‘’ ஹைதராபாத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்’’ என்ற தலைப்பில் 50-வது வெபினாருக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 24 AUG 2020 6:16PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நமது தேசத்தைப் பாருங்கள் இணைய வழித் தொடர் 50-வது அமர்வை எட்டி சாதனை படைத்துள்ளது. “ஹைதராபாத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்’’ என்னும் தலைப்பில் 50-வது அமர்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்றதுஇந்தத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம்தேதி தொடங்கியது. இந்தியாவில் இதுவரை அதிகமாக அறியப்படாத இடங்கள் உள்பட பல்வேறு சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவதையும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு  மத்திய சுற்றுலா அமைச்சகம் நமது தேசத்தைப் பாருங்கள் தொடரை நடத்தி வருகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும்  எழுச்சியையும் இது ஏற்படுத்தி வருகிறது.

ஹைதராபாத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்’’ வெபினாரை பாரம்பரியக் கல்வி ஆலோசகரும், எழுத்தாளரும், கன்சர்வேசன் ஆர்க்கிடெக்டுமான  திருமிகு. மது வோட்டரி வழங்கினார். தெலங்கானாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஹைதராபாத்தின் கலாச்சாரத்தை இது படம் பிடித்துக்காட்டியது. நிசாம் ஆட்சி காலத்திலிருந்து  வந்த இஸ்லாமியர்களின் தாக்கம், ஹைதராபாத்தின் குறிப்பாக பழைய நகரத்தின் கட்டடக்கலை, உணவு, வாழ்க்கை முறை, மொழி ஆகியவற்றில்  பிரதிபலித்தது. புதிய நகரம் எவ்வாறு நவீன வாழ்க்கை முறை கலாச்சாரத்துக்கு  மாறியது என்பதை வெபினாரை வழங்கியவர் விளக்கினார். ஹைதராபாத் வளமான இலக்கியப் பாரம்பரியம், நுண்கலைகள் கொண்டதாகும். அங்குள்ள ஏராளமான அருங்காட்சியகங்கள், கலைக்களஞ்சியங்கள், கண்காட்சிகள் அந்த நகரத்தின் பாரம்பரியத்தை விளக்குவதாகும்.

நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய -நிர்வாகத் துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது  https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured  என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்இத்தொடரின் அடுத்த அத்தியாயம் ஹம்பியை ஆராய்வோம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29-ஆம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

*******



(Release ID: 1648280) Visitor Counter : 225