ரெயில்வே அமைச்சகம்
கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2020 ஆகஸ்ட் 21 வரையில் 6 லட்சத்து 40 ஆயிரம் மனித உழைப்பு நாட்களுக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது இந்திய ரயில்வே.
Posted On:
23 AUG 2020 5:10PM by PIB Chennai
கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் மனித உழைப்பு நாட்களுக்கான வேலைகளை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுதல் மற்றும் அதன் முன்னேற்றங்கள் குறித்து ரயில்வே மற்றும் வணிகம், தொழில் துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் தீவிரமாகக் கவனித்து வருகிறார். இந்த மாநிலங்களில் சுமார் 165 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2020 ஆகஸ்ட் 21ஆம் தேதி வரையில் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் 12,276 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றை செயல்படுத்தியமைக்காக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1,410.35 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் இத் திட்டத்தின் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு முன்னோடி அதிகாரிகளை ரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது.
(Release ID: 1648085)
Visitor Counter : 198