சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரே நாளில் இதுவரை இல்லாத உச்சமாக இந்தியாவில் 63,631 பேர் குணமடைந்தனர்.


குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது.

சிகிச்சை பெற்று வருபவர்களை விட 15 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இடுகை இடப்பட்ட நாள்: 22 AUG 2020 3:33PM by PIB Chennai

இந்தியாவின் தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரம் என்ற புதிய உச்சம் தொட்ட அதே நாளில், இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியது. கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 63,631 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19 நோயாளிகள் அதிக அளவில் குணைமடைந்துள்ளதுடன், மருத்துவமனைகளிலிருந்தும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் (சிறிய மற்றும் மிதமான பாதிப்பு) இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 74.69 சதவீதம் என்ற அளவை எட்டியதுஇதனால், இறப்பு விகிதமும் சரிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 1.87 சதவீதமாக அது குறைந்திருக்கிறது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை (6,97,330) விட குணைமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்துக்கும் அதிகமாகும். குணமடைவோர் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருவதால், நாட்டின் தற்போதைய பாதிப்பு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. மொத்த பாதிப்பில் இது 23.43சதவீதம். தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று முன்னதாகவே கண்டுபிடிக்கப்படுவதாலும், விரிவான கண்காணிப்பு மற்றும் தொடர்பைக் கண்டறிதல், செயல்திறன் மிக்க மருத்துவ சிகிச்சை ஆகியவை நோயாளிகள் விரைந்து குணமடைவதை உறுதி செய்துள்ளனகுணைமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைந்து வருவது ஆகியவை இந்தியாவின் கள ஆய்வு மற்றும் தீவிர உத்திகளுக்குக் கிடைத்திருக்கும் பயனாகும்.

தொடர் கவனிப்பு அணுகுமுறை உருவாக்கம், தீவிர பரிசோதனைக் கொள்கை, விரிவான தொடர்பு கண்டறிதல், செயல்திறன் மிக்க சிகிச்சை, தீவிரக் கண்காணிப்பில் முழுமையான கவனம், வீடு,வீடாக சென்று தொடர்பை அறிதல் ஆகியவை கோவிட்-19 தொற்றை ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவுகின்றன. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். நிலையான மருத்துவ விதிகளின் படி, முழுமையான கவனிப்பு அணுகுமுறை அடிப்படையில், தீவிர பாதிப்புக்கு உள்ளானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவிட்-19 குறித்த தொழில்நுட்ப விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வ, அண்மைத் தகவல்களுக்கு தயவுசெய்து இந்தத் தளங்களை அணுகவும்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA .

தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva ஆகிய தளங்களை அணுகலாம்.

கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்: +91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்

****

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0019R5S.png

 


 


(வெளியீட்டு அடையாள எண்: 1647896) வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Malayalam