ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
சிறப்பான விலை கண்காணிப்பு முறை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க உதவியுள்ளது- திரு. கவுடா
உற்பத்தி விலை பற்றிய விரிவான ஆய்வு/ ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ் அனைத்து உரங்கள் இறக்குமதிக்கு உரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது
Posted On:
21 AUG 2020 12:24PM by PIB Chennai
உற்பத்தி விலை பற்றிய விரிவான ஆய்வு/ ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ் அனைத்து உரங்கள் இறக்குமதிக்கு மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் ,உரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. சதானந்த கவுடா கூறியுள்ளார்.
உரத்துறையின் செயல்திறன் மிக்க கண்காணிப்பு முயற்சி காரணமாக, உர நிறுவனங்கள் தற்போது கட்டாய சுய ஒழுங்கு பொறிமுறையை கையாண்டு வருவதாக திரு. கவுடா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் மறுசீரமைக்கப்பட்ட திரவ இயற்கை வாயு- ஆர்எல்என்ஜி விலை வீழ்ச்சியின் பயன்களை உர உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளன.
2019 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், மெட்ரிக் டன்னுக்கு ரூ. 26,396 ஆக இருந்த டிஏபி விலை இந்த மாதம் ரூ.24, 626 ஆக குறைந்துள்ளது என திரு. கவுடா தெரிவித்தார். இதேபோல, 18 என்பிகே உர கலவையில், 15 கலவையின் அதிக பட்ச சில்லரை விலை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருக்கிறது. 2019 ஆகஸ்ட் மாதம் மெட்ரிக் டன்னுக்கு ரூ.13,213 ஆக இருந்த அம்மோனியம் சல்பேட்டின் விலை ,2020 ஆகஸ்டில் மெட்ரிக் டன்னுக்கு ரூ.13,149 ஆக குறைந்துள்ளது.
(Release ID: 1647564)
Visitor Counter : 181