பிரதமர் அலுவலகம்

குரு கிரந்த் சாஹிப்பின் திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 19 AUG 2020 7:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குரு கிரந்த் சாஹிப்பின் முதல் திறப்பு நாளான பர்காஷ் புரப் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குரு கிரந்த் சாஹிப் புனித நூலானது, சேவை, இரக்கம் மற்றும் நல்லிணக்கத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. இந்த போதனைகள், நேர்மையான, சமத்துவ சமுதாயத்திற்கான அடித்தளத்தை  அமைத்துக் கொடுக்கின்றன. அநீதிக்கு ஒருபோதும் தலைவணங்கக் கூடாது என்பதையும் நமக்கு கற்றுத்தருக்கின்றன. குரு கிரந்த் சாஹிப்பின் முதல் திறப்பு நாளான இந்தத் திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

குரு கிரந்த் சாஹிப் புனித நூலானது, தனது உயரிய போதனைகளால் மொத்த உலகத்திற்கும் ஒளியேற்றுகிறது.

இப்புனித நூலின் போதனைகளால் ஊக்கமடைந்த சீக்கிய மக்கள், உலககெங்கும் பல்வேறு தளங்களில் தமது முன்னோடிப் சேவைகளை  செய்து வருகின்றனர். அவர்களது துணிச்சலும், அன்பும் மிகச் சிறப்பானவை.

குரு கிரந்த் சாஹிப் புனித நூலானது என்றும் மனித குலத்தைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

***


(रिलीज़ आईडी: 1647221) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam