அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு கழகம் மற்றும் தேசிய வான்வெளி சோதனைக் கூடம் ஆகியன வான்வெளிப் பொறியியல் தொடக்கநிலை நிறுவனங்களுக்கு அடைகாத்தல் எனப்படும் முழு வளர்ச்சி நிலை எய்துவதில் உதவும்
Posted On:
19 AUG 2020 11:16AM by PIB Chennai
தொடக்கநிலை நிறுவனங்கள் புதுமைப்படைப்பை பொது நீரோட்டத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளாகும். இதற்கான செயல் திட்டம் எளிமையாக்குதல் மற்றும் கைப்பிடித்து அழைத்துச் செல்லுதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும்.
தொடக்கநிலை நிறுவனங்களின் மற்றொரு முக்கிய அம்சம் தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு மற்றும் அடைகாத்தல் எனப்படும் முழு வளர்ச்சி
நிலை எய்துவதில் உதவுவது ஆகும். இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு கழகம் மற்றும் அறிவியல்- தொழிலியல் ஆராய்ச்சி சபையின் தேசிய வான்வெளி சோதனைக் கூடம் ஆகியன தனியார் வெளிநிதியுடன், வளர்ந்து வரும் வான்வெளித் தொழில்நுட்பத் துறையில் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு உதவ புதுமைப் படைப்பு மற்றும் அடைகாத்தல் மையங்களை
அமைக்க முன்வந்துள்ளன. இந்தத் திட்டத்தின்படி வான்வெளித் தொழில்நுட்பத்துறை சார்ந்த தொடக்க நிலை நிறுவனங்கள் முழு வளர்ச்சி அடைய உதவும் வகையில், போதனை அறிவுரைகள் வழங்கப்படுவதுடன் அவற்றின் உற்பத்திப் பொருட்கள் மேம்பாடு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் ஆதரவும் வழங்கப்படும். "முக்கிய உயர் தொழில்நுட்பத் துறையான வான்வெளிப் பொறியியல் துறையில் தொடக்கநிலை நிறுவங்களை மேம்படுத்த தேசிய ஆராய்ச்சி
மேம்பாட்டுக்கு கழகம் மற்றும் அறிவியல்- தொழிலியல் ஆராய்ச்சி சபையின் தேசிய வான்வெளி சோதனைக் கூடம் ஆகியன புதுமையான ஒத்துழைப்பை ஏற்படுத்தி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் இதர ஆய்வுக்கு கூடங்கள், புதுமைப் படைப்பு மற்றும் அடைகாக்கும்
மையங்களை அமைக்க இந்த ஒத்துழைப்பு வழிவகுக்கும் " என்று தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழக முதன்மை நிர்வாக இயக்குனர் டாக்டர் எச் புருஷோத்தமன் கூறினார். " மேலும் இந்த கால கட்டத்தில் மிக அவசியமான, நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்த ஒத்துழைப்பு உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
டாக்டர் எச் புருஷோத்தமன் மற்றும் அறிவியல்- தொழிலியல் ஆராய்ச்சி சபையின் தேசிய வான்வெளி சோதனைக் கூட இயக்குனர் டாக்டர் ஜிதேந்திர ஜெ.ஜாதவ் கையெழுத்திட்ட இந்த ஒத்துழைப்பு ஒப்பந்த ஆவணங்கள் இவற்றின் பிரதிநிதிகளிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டன. மத்திய அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சித் துறைச் செயலாளர், டாக்டர் சி மான்டே, அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபைத் தலைமை இயக்குனர் திரு ஆர். வைத்தீஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சித் துறை இணைச் செயலர், அறிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபை, தேசிய வான்வெளி ஆராய்ச்சி கூடம் ஆகியற்றின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆவணப் பரிமாற்றம் நடைபெற்றது.
-----
(Release ID: 1646938)
Visitor Counter : 191