அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19க்கான இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன

Posted On: 18 AUG 2020 10:11AM by PIB Chennai

இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்கள் மூலமாக கோவிட்-19ன் நோய் தோற்றவியல் மற்றும் நோய் மேலாண்மை குறித்த நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய எட்டு இருநாட்டுக் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளனஇந்தக் குழுக்கள் மேற்கொண்டு இருக்கின்ற ஆராய்ச்சியில் வைரசுக்கு எதிரான பூச்சுகள், நோய்எதிர்ப்பு சக்தி சீரமைப்பு, கழிவு நீரில் சார்ஸ் கொரோனா வைரஸ்-2 தடம் அறிதல், நோய் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள், தலைகீழ் மரபணு உத்திகள் மற்றும் வேறொரு நோய்க்கான மருந்தை கோவிட்-19க்காக பயன்படுத்தல் ஆகியன உள்ளடங்கும்.

இந்திய-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பானது (IUSSTF)  கோவிட்-19 இந்திய-அமெரிக்க மெய்நிகர் வலைப்பின்னல்களில் பங்கற்றுள்ள இந்திய மற்றும் அமெரிக்காவின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய எட்டு இருநாட்டு குழுக்களுக்கு விருதுகளை அறிவித்து உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கும், அதைத் தொடர்ந்து உருவாகி வரும் சர்வதேச சவால்களுக்கும் தீர்வுகளைக் காண்பதற்காக முயற்சி செய்து வரும் மருத்துவ மற்றும் விஞ்ஞான குழுவினர்களுக்கு இந்த வலைப்பின்னல் குழுவினர் உதவி வருகின்றனர்இந்த அமைப்பானது இந்திய மற்றும் அமெரிக்க அரசுகள் கூட்டாக நிதியுதவி அளித்து தன்னாட்சியாக செயல்பட்டு வரும் இருதரப்பு அமைப்பாகும்இந்த அமைப்பு அரசாங்கம், கல்வியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் ஆகியோருக்கு இடையில் குறிப்பிடத்தகுந்த உள்ளுறவு மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறதுஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் அமெரிக்காவின் அரசாங்கங்களுக்கான துறை ஆகிய இரண்டும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்புத் துறைகள் ஆகும்

செயல்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து தங்களது செயல்திட்டங்களை சமர்ப்பித்த சிறந்த குழுக்களில் இருந்து இந்த எட்டு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளனஇந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஒருங்கிணைந்த தொழில் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துதல், கோவிட் தொடர்பான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டுள்ள இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுனர் குழுக்களுக்கு இடையில் கூட்டுறவு ஏற்பட உதவுதல், ஆராய்ச்சியை மேம்படுத்தி மேலும் விரைவுபடுத்துவதற்காக இரண்டு நாடுகளிலும் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை தொடர்பாக இந்த செயல்திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

******


(Release ID: 1646651) Visitor Counter : 215