சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தடுப்பூசி போடுதல் குறித்த தேசிய நிபுணர்கள் குழு உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 17 AUG 2020 7:53PM by PIB Chennai

தடுப்பூசி போடுதல் குறித்த தேசிய நிபுணர்கள் குழு உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியாளர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், புனே; பாரத் பயோடெக், ஹைதராபாத்; ஜைடஸ் கேடிலா, ஆமதாபாத்; ஜென்னோவா பயோ பார்மசூட்டிகல்ஸ், புனே; மற்றும் பயலாஜிக்கல் இ, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு பரஸ்பரம் பயன்தரக் கூடியதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தது.

உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உருவாக்கி வரும் பல்வேறு தடுப்பூசி மருந்துகளின் இப்போதைய நிலை குறித்தும், மத்திய அரசிடம் இருந்து என்ன உதவிகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தேசிய நிபுணர்கள் குழுவிடம் தகவல்கள் தெரிவிக்கும் வாய்ப்பாக இது இருந்தது.


(रिलीज़ आईडी: 1646615) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Odia , Telugu