தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஐஐஎம்சி தனது 56-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது

Posted On: 17 AUG 2020 6:12PM by PIB Chennai

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேசன் - ஐஐஎம்சி எனப்படும் இந்திய வெகுஜனத் தொடர்பு நிறுவனம் தனது 56-வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடியது. இதனையொட்டி, தில்லியில் உள்ள தலைமையகத்திலும், நாடு முழுவதும் உள்ள மண்டல மையங்களிலும், ஆன்லைன் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலரும், ஐஐஎம்சியின் தலைவருமான  திரு.அமித் காரே  நிறுவன தின உரை நிகழ்த்தினார்.

திரு.காரே, தேசிய கல்விக் கொள்கை - தத்துவம் மற்றும் வழிகாட்டும் கொள்கைகள் குறித்து உரையாற்றினார். நாட்டில் தகவல் கல்விக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலில், இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்பு துறையை, மத்திய, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்துமாற்றியமைப்பதில் ஐஐஎம்சி முன்னிலை வகிக்க வேண்டும் என்று திரு. காரே கேட்டுக்கொண்டார்.

தொழில்நுட்பம் சார்ந்த கல்வி குறித்து குறிப்பிட்ட அவர் இதழியல், வெகுஜனத் தொடர்பு ஆகியவற்றில் ஆன்லைன் வகுப்புகளை உருவாக்கி, தேசிய கல்வி தளங்களில் தயாரிப்பு அம்சங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஊடக மாணவர்களுக்கு, சிறந்த உலகப் பார்வையை உருவாக்க, தொழில் சார்ந்த பயிற்சிகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு, ஐசிஎஸ்எஸ்ஆர், ஜேஎன்யூ போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் கூட்டுறவுடன் ஐஐஎம்சி இணைந்து பணியாற்ற வேண்டும் என திரு.காரே கேட்டுக்கொண்டார்.



(Release ID: 1646610) Visitor Counter : 146