சுற்றுலா அமைச்சகம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் வழங்கும், நமது தேசத்தைப் பாருங்கள் தொடரின் கீழ், 4-வது சுதந்திர தினக் கருப்பொருள் வெபினார்–ஜாலியன்வாலா பாக்; விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை
Posted On:
17 AUG 2020 4:41PM by PIB Chennai
மத்திய சுற்றுலா அமைச்சகம், நமது தேசத்தைப் பாருங்கள் தொடரின் கீழ், சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்ட வெபினார்களையும் வழங்கிவருகிறது. ஒட்டு மொத்தமாக 48 வெபினார்களை வழங்கியுள்ள சுற்றுலா அமைச்சகம், ஜாலியன்வாலா பாக்- விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை என்ற 4-வது அத்தியாயத்தை வழங்கியுள்ளது.
நமது தேசத்தைப் பாருங்கள் தொடரின் 48-வது அத்தியாயம், ஜாலியன்வாலா பாக் 1919, ஒரு உண்மைக் கதை நூலின் ஆசிரியரும், தி பார்ட்டிசன் அருங்காட்சியகம்/ கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவருமான திருமிகு.கிஷ்வர் தேசாயால் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடுஞ்செயல் , இந்தப் படுகொலை சம்பவம் எவ்வாறு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக நாட்டை ஒன்றுபடுத்தியது என்பதை அவர் விளக்கினார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இயக்கத்தின் கீழ், நமது தேசத்தைப் பாருங்கள் தொடர், இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் முயற்சியாகும்.
மத்திய சுற்றுலா அமைச்சகம், தனது பல்வேறு திட்டங்களின் கீழ், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளின் மேம்பாட்டுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, ஜாலியன்வாலா பாக் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அருங்காட்சியகம் மற்றும் கலைக்காட்சிக்கூடம் மேம்படுத்தப்பட்டு, அந்த நினைவிடத்தில் ஒலி, ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நமது தேசத்தைப் பாருங்கள் வலைதளத் தொடர் , மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-நிர்வாகத் துறையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் அமர்வுகள் தற்போது https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற தளத்தில் கிடைக்கும். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் கையாளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைக் காணலாம்.
*****
(Release ID: 1646599)
Visitor Counter : 239