ரெயில்வே அமைச்சகம்

பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில், ஏழைகள் நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளது

Posted On: 16 AUG 2020 4:04PM by PIB Chennai

பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில், ஏழைகள் நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித வேலை நாள்களை உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, ரயில்வே மற்றும் வர்த்தக-தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்.   இந்த மாநிலங்களில், சுமார் ரூ.2,998 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  14 ஆகஸ்ட், 2020 வரை 11,296 தொழிலாளர்கள், இத்திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு, ரூ.1,336.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறப்பு அதிகாரிகளையும் ரயில்வே துறை நியமித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தக்கூடிய ஏராளமான ரயில்வே பணிகளை, ரயில்வே துறை அடையாளம் கண்டுள்ளதுஇந்த வேலைகள்,  (1) ரயில்வே லெவல் கிராசிங்குகளுக்குச் செல்லக்கூடிய அணுகுசாலைகளின் கட்டுமானமும், பராமரிப்பும்,  (2) ரயில் தண்டவாளங்களை ஒட்டி அமைந்துள்ள வடிகால்கள்அகழிகள் மற்றும் வடிகால்களை சுத்தப்படுத்தி, மேம்படுத்துதல்,  (3) ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கான அணுகுசாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,  (4) தற்போதுள்ள ரயில்வே  நிலங்களின் கரைகள்/ நீர்ப்போக்கிகளை அகலப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு, (5) ரயில்வே நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் (6) தற்போதுள்ள கரைகள்/ நீர்ப்போக்கிகள்/பாலங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனஏழைகளுக்கான நலவாழ்வு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நம்பகமான ஊரகக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான, ரூ.50,000 கோடி செலவிடப்படுமென பிரதமர் அறிவித்திருந்தார்.

125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இத்திட்டம், ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்படுவதுடன்பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில்  உள்ள 116 மாவட்டங்களில்சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, 25 வகையான பணிகள்/செயல்பாடுகள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.   இந்த இயக்கத்தின் போது மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளுக்காக, ரூ.50,000 கோடி நிதி ஆதாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

12 பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம்,  25 பொதுக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் வாழ்வாதரத்திற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும்.

                                                                    *****



(Release ID: 1646370) Visitor Counter : 186