குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நவ்ரோஸ் புத்தாண்டையொட்டி மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 16 AUG 2020 10:04AM by PIB Chennai

நவ்ரோஸ் தினத்தையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவரது வாழ்த்து செய்தி குறித்த முழுவடிவம் வருமாறு:

 

பார்சி புத்தாண்டைக் குறிக்கும்நவ்ரோஸ்தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு  எனது உளம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தியாவின் கலாச்சார தளத்தில் பார்சி சமுதாயம்  முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மூலம், இந்தியாவின் பார்சி சமுதாயத்தினர் , நாட்டைக் கட்டமைப்பதில் மதிப்புமிக்கப் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். வசந்த காலத்தின் துவக்கத்தைக் குறிக்கும் பார்சிப் புத்தாண்டு புதுப்பித்தல், புத்தாக்கத்தைக் குறிக்கும் பண்டிகையாகும். நவ்ரோஸ் பண்டிகை  சிறந்த எண்ணங்கள், நற்செயல்கள், உண்மை உணர்வுடன் வாழ்தல், சரியான பாதையில் நடத்தல் என்ற அதன் உண்மையான உணர்வில் கொண்டாடப்படுகிறது.

 

கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக, இந்தியாவும், உலகமும் தொடர்ந்து அயராது போராடி வருகின்றன. குடும்பம், நண்பர்கள், ஒன்றுபட்டு வழிபட்டுக் கொண்டாடும் பண்டிகையாக நவ்ரோஸ் இருந்த போதிலும், இந்த ஆண்டு, மக்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்தவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, மிதமான கொண்டாட்டத்தில் ஈடுபட  வேண்டும்தனி நபர் இடைவெளி, தனிமனித சுகாதாரம் ஆகியவற்றைக் கடுமையாகக் கடைப்பிடித்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

 

இந்தப் பண்டிகை நம் வாழ்வில், நட்பு , முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளிக்கட்டும்

 

********


(Release ID: 1646365) Visitor Counter : 149