பாதுகாப்பு அமைச்சகம்
செங்கோட்டையில் விடுதலை நாள் கொண்டாட்டங்கள் 2020 : முன்னோட்டம்
Posted On:
14 AUG 2020 7:40PM by PIB Chennai
புதுதில்லியிலுள்ள கம்பீரமான செங்கோட்டையில், 74 ஆவது இந்திய விடுதலை நாள் கொண்டாட்டங்கள் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், நாடே நாளை கொண்டாடும். தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமான செங்கோட்டையின் மதில்களிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். செங்கோட்டையின் லாகூர் வாயிலுக்கு, காலை 07.18 மணிக்கு வந்தடையும் பிரதமர் திரு.நரேந்திர மோடியை, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கும், பாதுகாப்புத்துறைச் செயலர் டாக்டர் அஜய் குமாரும் வரவேற்பார்கள்.
இராணுவப் படை தலைமை அதிகாரி தில்லி பகுதியின் லெஃப்டினன்ட் ஜெனரல் விஜய் குமார் மிஸ்ராவை (சி ஓ சி, தில்லிபகுதி) பாதுகாப்புச் செயலர் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைப்பார். அதன் பிறகு ஜி ஓ சி தில்லி பகுதி, பிரதமரை வணக்கம் செலுத்தும் தளத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு முப்படைகளையும், காவல்துறைப் பாதுகாப்புப் படையையும் சேர்ந்த வீரர்கள் திரு.நரேந்திர மோடிக்கு பொது வணக்கம் செலுத்துவார்கள். அதன்பிறகு பிரதமர் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடுவார்.
பிரதமருக்கான மரியாதை அணிவகுப்புத் தொடரில், அதிகாரி ஒருவரும், இராணுவப்படை, கடற்படை, விமானப்படை, தில்லி காவல்துறை ஆகிய ஒவ்வொன்றிலும் இருந்து, 24 பேரும் இடம் பெற்றிருப்பார்கள். இந்த மரியாதை அணிவகுப்பு, செங்கோட்டையின் மதில் சுவருக்குக் கீழே உள்ள அகழியைத் தாண்டி, தேசியக் கொடிக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டிருக்கும்.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் செங்கோட்டையில் மதில் சுவர்களுக்குச் செல்வார். அங்கு அவர் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்; பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத்; கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்வீர் சிங்; விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மர்ஷல் கே எஸ் ப டோரியாஆகியோரால் வரவேற்கப்படுவார். தில்லி பகுதி ஜி ஓசி, பிரதமரை செங்கோட்டையின் மதில் சுவரில் உள்ள மேடைக்கு தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அழைத்துச் செல்வார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியேற்றியதும், தேசியப் பாதுகாப்புப் படை, தேசியக் கொடிக்கு மரியாதை வீரவணக்கம் செலுத்தும். தேசியக் கொடி ஏற்றப்படும் போதும், கொடிக்கு மரியாதை வீரவணக்கம் செலுத்தப்படும் போதும் இராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவு மையத்தின்,இராணுவ இசைக்குழு, தேசிய கீதத்தை இசைக்கும். சீருடை அணிந்த சேவைப் பணியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்துவார்கள். மீதி உள்ளவர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இசைக் குழுவுக்கு சுபேதார் மேஜர் அப்துல்கானி தலைமை தாங்குவார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். பிரதமரின் உரை நிறைவுற்ற பிறகு, தேசிய மாணவர் படையினர் தேசிய கீதம் பாடுவார்கள். அங்குள்ள அனைவரும் தங்களது இருக்கைக்கு அருகே எழுந்து நின்று தேசிய கீதத்தை இணைந்து பாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். சீருடை அணிந்த பணியாளர்கள் இந்த தருணத்தில் வணக்கம் செலுத்தத் தேவையில்லை.
நாடே மகிழ்கின்ற இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, 500 தேசிய மாணவர் படை மாணவர்கள் (இராணுவம், கடற்படை, விமானப்படை) பங்கேற்பார்கள்.
(Release ID: 1645964)
Visitor Counter : 236