ரெயில்வே அமைச்சகம்

ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2, 2020 வரை “ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தை” செயல்படுத்த இந்திய ரயில்வே முழுமையாக துணைபுரிகிறது

Posted On: 14 AUG 2020 6:31PM by PIB Chennai

இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்” என்ற புதிய முயற்சியை முழுமையாக ஆதரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2, 2020 வரை தொடரும். ஆரோக்கிய இந்திய இயக்கத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

தனி நபர் இடைவெளியைப் பராமரிக்கும் போது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய இன்றியமையாத தேவையைக் கருத்தில் கொண்டு ”ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டத்தில் ஒருவர் அவருக்கு/அவளுக்கு ஏற்ற நேரத்தில்  விருப்பப்பட்ட பாதையில் ஓடலாம் / நடக்கலாம். அத்தகைய ஓட்டம் / நடைப்பயணத்தின் போது ஒருவர் இடைவெளி கூட எடுக்கலாம். அடிப்படையில், ஒருவர் தனது வேகத்தை விடவும்., தனது சொந்த பந்தயத்தை நடத்துகிறார்.  

”ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டம்" வெள்ளிக்கிழமை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் (சுயாதீனப் பொறுப்பு) மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் திரு. கீரன் ரிஜிஜு மற்றும் திரு. வி.கே. யாதவ், தலைவர், ரயில்வே வாரியம் ஆகியோரால் தொடங்கப்பட்டது, இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செய்ய, அனைத்து மண்டல ரயில்வே / பிரிவுகள் விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ”ஆரோக்கிய இந்திய சுதந்திர ஓட்டத்தில்' ஏராளமான ரயில்வே அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதன் மூலம் இயக்கத்தில் அதிகப் பங்களிப்பை உறுதிப்படுத்துவதுடன், இளைஞர் விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ளபடி எளிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தங்களை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்ளவும், இந்திய அரசு தனது இணையதளத்தில் கூறியவற்றை பின்பற்றவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.  : www.fitindia.gov.in.

***********



(Release ID: 1645961) Visitor Counter : 167