குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சுதந்திர நாளையொட்டி குடியரசுத் துணைத்தலைவர் மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2020 4:28PM by PIB Chennai

விடுதலை நாளைட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

நமது நாட்டின் விடுதலை நாளையொட்டி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நாம் நம் நாட்டின் 74 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம். விடுதலை அடைந்த இந்தியாவை உருவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை அளிப்பதற்காக, எண்ணற்ற தியாகங்கள் புரிந்த, துணிவு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன். விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளையும், நாம் நன்றியுடன் நினைவு கொள்ள வேண்டும்.

 

இந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் எத்தகைய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அத்தகைய இந்தியாவை உருவாக்குவதே, நாம் இந்த தேசபக்தர்களுக்கு செய்யும் அர்த்தமுள்ள புகழஞ்சலியாகும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான கனவுகள் நனவாகி பூர்த்தி செய்யப்படுகின்ற இந்த தேசத்தில், இந்த விடுதலை நாளில், ஒற்றுமை வாய்ந்த, வலுவான, செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான தேசத்தை உருவாக்குவது என்ற நமது பொறுப்புணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வோம்..

 

இந்த விடுதலை நாள், நம் நாட்டில் இணக்கத்தையும், இசைவையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்”.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1645840) வருகையாளர் எண்ணிக்கை : 253
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Malayalam