உள்துறை அமைச்சகம்

“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்கான தளம் புதிய இந்தியாவிற்கான முக்கிய நடவடிக்கை – மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 13 AUG 2020 4:06PM by PIB Chennai

 “வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல்” என்பதற்காக துவக்கப்பட்டிருக்கும் தளமானது, புதிய இந்தியாவுக்கான முக்கிய நடவடிக்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள  ட்விட்டர் பதிவுகளில், “வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல் என்பதற்கான தளம், பிரதமர் திரு நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும் வரிசெலுத்துவோருக்கு அளித்த பரிசாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். “முகமில்லா மதிப்பீடு, முகமில்லா முறையீடு போன்ற சீர்திருத்தங்களால், இந்தத் தளம் நமது வரிசெலுத்தும் முறையை மேலும் வலுப்படுத்தும்” என்று திரு அமித் ஷா கூறியுள்ளார்.

    

     “இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள நேர்மையான வரிசெலுத்துவோரை மதிப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும், மோடி அரசு பல்வேறு மைல்கல் முடிவுகளை மேற்கொண்டுள்ளது.  “குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இந்தத் தளமாகும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

 

*****



(Release ID: 1645513) Visitor Counter : 99