விவசாயத்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியா/கிருஷி இயக்கத்தின் கீழ், விவசாயிகள் நலனுக்காக, விவசாய எந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Posted On: 08 AUG 2020 1:02PM by PIB Chennai

விவசாயத்துறை நிலைத்த வளர்ச்சியடைவதற்கு உதவக்கூடிய முக்கியமான கருவிகளில் விவசாய எந்திரமயமாக்கலும் ஒன்றாகும். இது, உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பண்ணை நடைமுறைகள் மூலம் உற்பத்தி அதிகரிப்பு, இழப்பைக் குறைத்தல், அதிக விலை இடுபொருள்களை சரியாக மேலாண்மை செய்வதன் மூலம் செலவைக் குறைத்தல் ஆகியவற்றுக்குப் பெரிதும் உதவும்எந்திரமயமாக்கல், இயற்கை வள உற்பத்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு பண்ணை நடவடிக்கைகளில் வேலைப் பளுவையும் குறைக்கிறது. இந்திய அரசின், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உருவாக்கியுள்ள #AtmaNirbharKrishi ஹேஷ்டாக் கீழ், விவசாய எந்திரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு எடுத்துள்ள முன்முயற்சிகள் வருமாறு;

நாட்டில், விவசாய எந்திரமயமாக்கலை மேம்படுத்த சிறப்பு முயற்சிகளுக்காக, அதிக அளவிலான உள்ளடக்கம், விவசாய எந்திரமயமாக்கல் குறித்த துணை இயக்கம், 2014 ஏப்ரல் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, 2020-21-ஆம் ஆண்டில், ரூ.1033 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.553 கோடி மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2018-19, 2019-20-ஆம் ஆண்டுகளில் மொத்தம் ரூ.1178. 47 கோடி, பஞ்சாப், அரியானா, .பி., தலைநகர் தில்லி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுஇத்திட்டத்திற்கு, 202-21-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, மாநிலங்களுக்கு ரூ.548.20 கோடி முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், “CHC- Farm Machinery” என்ற பன்மொழி கைபேசிச் செயலியை உருவாக்கியுள்ளது. இது விவசாயிகளை, அவர்களது பகுதியில் உள்ள வாடகைச் சேவை மைங்களுடன் இணைக்கிறது.

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்தியாவும் இதற்கு விலக்கல்ல. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையைக் குறைக்கவும், ராபி பருவப் பயிர்களை உரிய நேரத்தில் அறுவடை செய்யவும், பண்ணைப் பொருள்களையும், எந்திரங்களையும்  தடையின்றி விநியோகிக்கவும், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சம், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், விவசாய எந்திரமாக்கலில் பின்வரும் நடவடிக்கைகளைத் தளர்த்தியுள்ளது.

 •         விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஊரடங்கின் போதும் வயலில் பண்ணை வேலைகளைத் தொடருவதற்கான அரசின் விதிமுறைகளில் வசதி.

•          பண்ணை எந்திரம் தொடர்பான வாடகை மையங்கள் நடவடிக்கைகள் தளர்த்தப்படுகிறது.

•          விவசாய எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கடைகள்  (விநியோகம் உள்பட) திறந்திருக்கும்.

•          மாநிங்களுக்குள், மாநிலங்களுக்கு இடையிலான தடையற்ற, அறுவடை, விதைப்பு எந்திரங்கள் மற்றும் இதர விவசாய நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்.

அரசின் மானியத் திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியாளர்கள், அத்தியாவசிய சோதனை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் சோதனை, சோதனை அறிக்கைகள் காலாவதியான பின்னரும் தொடர் சோதனைகள் மேற்கொள்வதுசிஎம்விஆர், சிஓபி, ஆகியவற்றை மேம்படுத்துவது, டிராக்டர்கள், மின்சாரத் தோண்டும் எந்திரங்கள், அறுவடை எந்திரங்கள் இதர விவசாய எந்திரங்கள் போன்றவற்றுக்கான அனுமதி 31.12.2020 வரை அனுமதிக்கப்படும்மாற்றியமைக்கப்பட்ட பிஐஎஸ் மற்றும் ஐஎஸ் தரம் 12207-2019 விதிமுறைகளின்படி டிராக்டர்கள் சோதிக்கப்படுவது மற்றும் 51 விவசாய எந்திரங்களுக்குப் புதியத் தொழில்நுட்ப விதிமுறைகளும் 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

பொதுமுடக்கம் காரணமாக, எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், அறுவடை எந்திரங்கள் உள்ளிட்ட விவசாய எந்திரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் தாண்டிச் செல்வது தடைபட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மாநில விவசாய எந்திரவியல் முகமை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், விவசாய எந்திரங்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால், விவசாய எந்திரங்கள் எல்லை தாண்டி தடையின்றிச் சென்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய முன்முயற்சிகளை நிறுவனப்படுத்துவதும் முக்கியமானதாகும். இதனால், இயக்குவதற்கான விவசாய எந்திரமாக்கல் விதிமுறைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் திறன் திட்டங்களும் தேவையான அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் நகல் http://farmech.dac.gov.in/  என்ற வலைதளத்தில் கிடைக்கும்.

 

***



(Release ID: 1644402) Visitor Counter : 223