பிரதமர் அலுவலகம்

அகமதாபாத் மருத்துமனை தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 AUG 2020 9:53AM by PIB Chennai

அகமதாபாத் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில்  ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை அறிந்து துயருற்றேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். தற்போதைய நிலவரம் குறித்து குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானியுடனும்,    அகமதாபாத் நகர மேயர் திருமதி பிஜால்பென் படேலுடனும்  பேசினேன். அரசு நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று கூறியுள்ளார்.

***** 



(Release ID: 1643695) Visitor Counter : 111