பிரதமர் அலுவலகம்
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
Posted On:
05 AUG 2020 3:37PM by PIB Chennai
சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்!
கடவுள் ராமரைப் போற்றுவோம்!
சீதாவின் கணவர் ராமச்சந்திர மூர்த்திக்கு வெற்றி உண்டாகட்டும்!
கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்! கடவுள் ராமரைப் போற்றுவோம்!
சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க! சீதா ராமர் வாழ்க!
இந்த ஒலி, கடவுள் ராமரின் நகரமான அயோத்தியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஒலிக்கிறது. இந்த பெருமைவாய்ந்த தருணத்தில், கடவுள் ராமரின் தீவிர பக்தர்களுக்கும், எனது அருமை நாட்டு மக்களுக்கும், பல்வேறு கண்டங்களிலும் பரவியிருக்கும் கோடிக்கணக்கான இந்திய குடிமக்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஆர்வமுள்ள, தீவிரமாக செயல்படும் மற்றும் பாராட்டத்தக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, பரம்புஜ்ய மகந்த் நிரித்ய கோபால் தாஸ் மகாராஜ் அவர்களே, எனது பெருமதிப்பிற்குரிய திரு.மோகன் ராவ் பகவத் அவர்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எளிமையின் வடிவங்களான மாபெரும் சாதுக்கள் மற்றும் ஆசான்களே மற்றும் எனது அருமை இந்தியர்களே! அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அற்புதமான மற்றும் வரலாற்றுப்பூர்வமான நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமைக்காக அறக்கட்டளைக்கு நான் கடன்பட்டுள்ளேன். உண்மையில், இது நாம் தவற விடும் நிகழ்ச்சியில்லை. “ राम काजु कीन्हे बिनु मोहि कहाँ बिश्राम॥ (Ram Kaju keenhe Mohi KahanVishram)” என்று நாம் கூறுவோம். அதாவது, “கடவுள் ராமர் அளித்த பணியை நிறைவேற்றாமல் நான் எவ்வாறு ஓய்வெடுப்பேன்” என்பது இதன் பொருள்.
கடவுள் பாஸ்கரின் ஆசியால், அற்புதமான சரயு நதிக்கரையில் பொன்னான வரலாற்றுப்பூர்வமான தருணத்தை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த நீளத்திலும், மனதிலும், கன்னியாகுமரி முதல் ஷீர் பவானி வரை, கோட்டேஸ்வர் முதல் காமக்யா வரை, ஜெகன்னாதர் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் வரை, சமேத் ஷிகர் முதல் ஷ்ராவன் பெலகோலா வரை, புத்தகயா முதல் சாரனாத் வரை, அமிர்தசரஸ் முதல் பாட்னா சாகிப் வரை, அந்தமான் முதல் அஜ்மீர் வரை, லட்சத்தீவு முதல் லே வரை, ஒட்டுமொத்த நாடும் கடவுள் ராமரால் சூழப்பட்டுள்ளது!
ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு இதயமும் மின்னுகிறது. ஒட்டுமொத்த நாடுமே உணர்வுப்பூர்வமாக உணர்கிறது. வரலாற்றின் ஓர் அங்கமாக இருப்பதற்கு பெருமைகொள்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வரலாற்றுப்பூர்வமான தருணத்தை கண்டுகளிக்கிறது.
நூற்றாண்டு கால காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. தங்களது வாழ்நாளில் இதுபோன்ற தருணத்தின் ஒரு அங்கமாக இருப்போம் என்று கோடிக்கணக்கான இந்தியர்களால் நம்பியிருக்க முடியாது என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
மகளிரே மற்றும் ஆடவர்களே, சிறப்பு விருந்தினர்களே, பல ஆண்டுகளாக இருந்த தற்காலிக கூடாரத்திலிருந்து கடவுள் ராமரை மாற்றி, அவருக்கு உரிய கோயில் வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. நமது கடவுள் ராமருக்கு தற்போது மிகப்பெரும் கோயில் கட்டப்பட உள்ளது.
இன்று, நூற்றாண்டு கால அழிவு மற்றும் உயிர்த்தெழுதல் நிகழ்வுகளிலிருந்து ராம ஜென்மபூமிக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
என்னுடன் இணைந்து குரல் எழுப்புங்கள்…. கடவுள் ராமர் வாழ்க, கடவுள் ராமர் வாழ்க.
நண்பர்களே, நமது சுதந்திரப் போராட்டத்தின்போது, பல்வேறு சந்ததிகள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டன. அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில், சுதந்திரத்துக்கான இயக்கம் இல்லாமல் இருந்ததில்லை. நாட்டில் சுதந்திரத்துக்காக தியாகம் செய்யாத பகுதி என்று எதுவுமே இல்லை. சுதந்திரத்துக்கான தீவிர ஏக்கம் மற்றும் லட்சக்கணக்கான மக்களின் தியாகத்தின் உருவகமாக ஆகஸ்ட் 15 திகழ்கிறது.
இதேபோல, ராமர் கோயில் கட்டுவதற்காக பல்வேறு சந்ததிகளும், பல நூற்றாண்டுகளாக தன்னலமற்ற தியாகங்களைச் செய்துள்ளன. நூற்றாண்டுகால தவம், தியாகம் மற்றும் உறுதி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தின்போது, தியாகம், அர்ப்பணிப்பு, உறுதி ஆகியவை இருந்தன. அவர்களின் தியாகம் மற்றும் போராட்டத்தால் அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் சார்பாக, அவர்களின் முன்பு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் தியாகத்தாலேயே இன்று ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கான புனிதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த நிகழ்ச்சியை இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதுடன், இந்த தருணத்தில் ஆசி வழங்குகின்றனர்.
நண்பர்களே, நமது மனங்களில் கடவுள் ராமர் நுழைந்துவிட்டார். எந்தவொரு பணியை நாம் மேற்கொள்ளும்போதும், ஊக்கத்தை அளிப்பதற்காக கடவுள் ராமரை எதிர்பார்க்கிறோம். கடவுள் ராமரின் தனித்துவமான சக்தியைப் பாருங்கள். கட்டிடங்கள் சேதமடைந்தன, இருப்பை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன… ஆனால், கடவுள் ராமர், நமது மனங்களில் முழுமையாக நிரம்பியுள்ளார். நமது கலாச்சாரத்தின் அடிப்படையே கடவுள் ராமர்; அவர்தான் இந்தியாவின் கவுரவம். அவர்தான் கவுரவத்தை உருவாக்கியுள்ளார். இந்த அற்புதத்துடனேயே ராமரின் மாபெரும் கோயிலுக்கான பூமிபூஜை விழா நடைபெற்றுள்ளது.
நான் இங்கு வருவதற்கு முன்னதாக, அனுமன் கார்கி கோயிலுக்கு பயணம் மேற்கொண்டேன். கடவுள் ராமரின் பணிகளை அனுமன் மேற்கொண்டார்.
இந்த கலியுகத்தில் கடவுள் ராமரின் கொள்கைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனுமனுடையது. ராம ஜென்ம பூமியின் அடிக்கல் நாட்டு விழா, கடவுள் அனுமரின் ஆசியால் தொடங்குகிறது.
நமது கலாச்சாரத்தின் நவீன அடையாளமாக ராமர் கோயில் திகழும். நவீன என்ற வார்த்தையை நான் திட்டமிட்டே பயன்படுத்துகிறேன். நமது அழியாத எதிர்பார்ப்பின் அடையாளமாக இருக்கும். இது நமது தேச உணர்வை உருவகப்படுத்தும். லட்சக்கணக்கான மக்களின் ஒருங்கிணைந்த உறுதியான சக்தியின் சின்னமாக இந்த கோயில் இருக்கும். எதிர்கால சந்ததியினரின் மனதில் எதிர்பார்ப்பு, தெய்வீகம் மற்றும் உறுதிப்பாட்டை இந்த கோயில் ஊக்குவிக்கும்.
கோயில் கட்டி முடிக்கப்பட்டால், அயோத்தியின் கம்பீரம் பல மடங்காக உயர்வதுடன், இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிகப்பெரும் மாற்றத்தைப் பெறும். ஒவ்வொரு துறையிலும் புதிய வழிகள் மற்றும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருவதை யூகித்துப் பாருங்கள். கடவுள் ராமர் மற்றும் சீதையை வழிபடுவதற்காக ஒட்டுமொத்த உலகமுமே இங்கு வரும். இங்குள்ள அம்சங்கள் எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
சக தோழர்களே, ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைப்பதற்கான இலக்கே ராமர் கோயில் கட்டுமானம். இந்தக் கொண்டாட்டம் என்பது, நம்பிக்கையை உண்மையுடனும், மனிதனை மிகப்பெரும் கடவுளுடனும், மனிதசமூகத்தை உறுதிப்பாட்டுடனும், கடந்த காலத்துடன் நிகழ் காலத்தையும், நெறிமுறைகளுடன் தனிப்பட்ட நபர்களையும் இணைப்பதற்கான தருணம் என்பதாலேயே நடைபெறுகிறது.
இன்றைய வரலாற்றுப்பூர்வ தருணம், உலகம் முழுமைக்கும், பல ஆண்டுகளுக்கும் நினைவுகூரப்படும். இது நமது நாட்டுக்கு பெருமை தேடித்தரும். ஸ்ரீராமரின் லட்சக்கணக்கான உறுதிப்பூர்வமான பக்தர்களுடைய நேர்மையின் அடையாளமே இந்த நாள்.
இந்த நாள், சட்டத்தை மதிக்கும் இந்தியாவிலிருந்து உண்மை, அகிம்சை, நம்பிக்கை மற்றும் தியாகத்துக்கு அளிக்கப்படும் தனிப்பட்ட பரிசு.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக, இந்த பூமி பூஜை விழா, கடும் கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவுள் ராமர் தொடர்பான எந்தப் பணிக்கும் பொருந்தும் வகையிலான கட்டுப்பாட்டை தேசம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு சிறந்த உதாரணத்தை அளித்துள்ளது.
வரலாற்றுப்பூர்வ முடிவை உச்சநீதிமன்றம் வழங்கியபோதும், நாம் இதே ஒழுங்கை வெளிப்படுத்தினோம். அப்போது, ஒவ்வொருவரின் உணர்வுப்பூர்வ நிலையை கருணையுடன் கவனத்தில் கொண்டு, முடிவை அமைதியான முறையில் ஒட்டுமொத்த தேசமும் எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்று நாம் பார்த்தோம். இன்றும்கூட, அதேபோன்ற அமைதியான செயல்பாட்டை நாம் அனுபவித்துள்ளோம்.
சக தோழர்களே, இந்த கோயில் புனிதமான இடத்தில் உருவாவதன் மூலம், புதிய வரலாறு எழுதப்பட்டதுடன், வரலாறு தனக்குத்தானே மீண்டும் உருவாகியுள்ளது.
அணில் மற்றும் குரங்குகள் போல, படகோட்டிகளும், வனப்பகுதிகளில் வாழும் மக்களும் கடவுள் ராமரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்;
கோவர்த்தன மலையை ஸ்ரீகிருஷ்ணர் தூக்குவதற்கு கால்நடை மேய்ப்பவர்கள் உதவியதைப்போன்று;
சுயராஜ்ஜியத்தை உருவாக்க சத்ரபதி சிவாஜிக்கு முக்கியமானதாக படை இருந்ததைப் போல;
வெளிநாட்டு ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மகாராஜா சுகல்தேவ் போராடுவதற்கு ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முக்கியப் பங்கு வதித்ததைப் போல;
சுதந்திரத்துக்கான போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு தலித்துகள், அடிமட்ட அளவில் இருப்போர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உதவியதைப் போல,
ராமர் கோயில் கட்டுவது என்ற தெய்வீகமான இலக்கை நிறைவேற்றுவதற்கான பணி, இந்திய மக்களின் ஆதரவுடன் இன்று தொடங்கியுள்ளது.
ஸ்ரீராமரின் பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் மூலம் ராமர் பாலம் கட்டப்பட்டதைப் போன்று, ஒவ்வொரு வீடுகள் மற்றும் கிராமங்களிலிருந்து தவத்தாலும், பக்தியாலும் கொண்டுவரப்பட்ட கற்கள், இங்கு சக்தியின் ஆதாரமாக மாறியுள்ளன.
அனைத்து மிகப்பெரும் மதத் தலங்கள், நாடு முழுவதும் உள்ள புனித ஆறுகளிலிருந்து புனித மண் மற்றும் நீர் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த இடங்களின் கலாச்சாரம் மற்றும் உணர்வுகள், இந்த இடத்தின் தனிப்பட்ட பலமாக இன்று மாறியுள்ளது.
இதனை இந்த வரிகளுடன் கூறலாம் -
न भूतो न भविष्यति।
இந்த இந்தியாவின் பக்தி மற்றும் இந்திய மக்களின் ஒற்றுமை மற்றும் இந்திய ஒற்றுமையின் மாபெரும் பலம் ஆகியவற்றை உலகம் கற்று ஆராய வேண்டிய தேவை உள்ளது.
நண்பர்களே,
ராமச்சந்திர மூர்த்தியின் சுறுசுறுப்பு, சூரியனுக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது; மன்னிக்கும் குணம், பூமிக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது, அவரது அறிவாற்றல், பிரிஹஸ்பதிக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது மற்றும் புகழ் அடிப்படையில் இந்திரனுக்கு இணையாகப் பார்க்கப்படுகிறது.
கடவுள் ராமரின் செயல்பாடுகள், உண்மை மற்றும் நேர்மையை உருவகப்படுத்துகின்றன. எனவே, முழுமையானவராக கடவுள் ராமர் கருதப்படுகிறார்.
இதன் காரணமாகவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவுக்கு உந்துசக்தியின் ஆதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறார். தனது ஆட்சிக்காலத்தில் சமூக நல்லிணக்கத்தை முக்கிய அடையாளமாக கடவுள் ராமர் வைத்திருந்தார்.
குரு வசிஷ்டரிடமிருந்து அறிவையும், கேவத்-திடமிருந்து அன்பையும், சபரியிடமிருந்து அன்னையைப் போன்ற அன்பையும், அனுமன் மற்றும் வனவாசிகளிடமிருந்து ஆதரவு மற்றும் ஒத்துழைப்பையும், மக்களிடமிருந்து தன்னம்பிக்கையையும் அவர் பெற்றார்.
உண்மையில், அணிலின் முக்கியத்துவத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரது அற்புதமான தனிப்பட்ட குணநலன்கள், அவரது வீரம், பெருந்தன்மை, நேர்மை, பொறுமை, தோற்றம், தத்துவ நோக்கம் ஆகியவை இனிமேல் வரவுள்ள பல்வேறு சந்ததிகளை ஊக்குவிக்கும்.
தனது மக்கள் அனைவர் மீதும் சமமான அன்பை ராமர் வைத்திருந்தார். ஆனால், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.
எனவே, ராமர் குறித்து அன்னை சீதாதேவி இவ்வாறு கூறுகிறார்…
न भूतो न भविष्यति। அதாவது, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவாளர் ஸ்ரீராமர்.
எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும், கடவுள் ராமரின் ஊக்கம் இல்லாத பகுதியே கிடையாது. கடவுள் ராமரை பிரதிபலிக்காத எந்தவொரு மூலையும் இந்தியாவில் இல்லை.
இந்தியாவின் நம்பிக்கை ராமர், இந்தியாவின் கொள்கை ராமர், இந்தியாவின் தெய்வீகம் ராமர், இந்திய தத்துவத்தில் வாழ்பவர் ராமர்!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால இந்தியாவின் உந்துசக்தியாக ராமர் இருந்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியகால இந்தியாவில் துளசி, கபீர், நானக் ஆகிய பெயர்களில் ஊக்குவிப்பாக ராமர் இருந்தார். தற்போதைய காலத்தில் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தின்போது, அஹிம்சை, சத்தியாகிரகம் என்ற வடிவில் வழிபாடுகளில் இருந்தவர் அதே ராமர்.
துளசியின் ராமர் வடிவம் கொண்டவர். ஆனால், நானக் மற்றும் கபீரின் ராமருக்கு வடிவம் கிடையாது.
கடவுள் புத்தரும்கூட, கடவுள் ராமருடன் தொடர்புடையவர். அதேநேரத்தில், நூற்றாண்டுகளுக்கு சமண மதத்தின் மையமாகவும் கூட, அயோத்தி நகரம் இருந்தது. எங்கும் பரவியிருக்கும் ராமர்தான், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறார்.
தமிழில் கம்ப ராமாயணமும், தெலுங்கில் ரகுநாத் மற்றும் ரங்கநாத் ராமாயணமும் உள்ளன.
ஒடியாவில் ருய்பாட்-கட்டேர்படி ராமாயணமும், கன்னடத்தில் குமுதேண்டு ராமாயணமும் உள்ளன. காஷ்மீரில் ராமஅவதார் சாரிட்டையும், மலையாளத்தில் ராமசரிதத்தையும் உங்களால் காண முடியும்.
வங்காளத்தில் கிரிதிபாஸ் ராமாயணம் உள்ளது. கோவிந்த் ராமாயணத்தை குரு கோவிந்த் சிங்கே எழுதினார்.
ஒவ்வொரு ராமாயணத்திலும் வேறு வேறு வடிவங்களில் ராமரை உங்களால் காண முடியும். எந்த இடத்திலும் ராமர் இருக்கிறார். அனைவருக்குமானவர் ராமர். அதன் காரணமாகவே, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை இணைப்பவராக ராமர் திகழ்கிறார்.
நண்பர்களே, உலகின் பல்வேறு நாடுகளும் கடவுள் ராமரை வழிபடுகின்றன. கடவுள் ராமருடன் தொடர்புடையவர்கள் என அந்த நாடுகளின் மக்கள் நம்புகின்றனர்.
உலகில் அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்ட நாடாக இந்தோனேஷியா உள்ளது. நமது நாட்டைப் போன்றே, அங்கும் “ககவின் ராமாயணம்”, “ஸ்வர்ணதீப் ராமாயணம்”, “யோகேஸ்வர் ராமாயணம்” போன்ற ராமாயணத்தின் பல்வேறு வகையான தனிப்பட்ட பதிப்புகள் உள்ளன. அங்கு இன்றும் கூட, கடவுள் ராமரைப் போற்றி வழிபடுகின்றனர்.
கம்போடியாவில் “ராம்கர் ராமாயணம்”, லாவோஸில் “ஃபிரா லாக் ஃபிரா லாம் ராமாயணம்”, மலேசியாவில் “ஹிகாயத் செரி ராம்”, தாய்லாந்தில் “ரமாகேன்” என வேறுபட்ட பெயர்களில் உள்ளன.
கடவுள் ராமரின் விளக்கத்தையும், ராமர் கதையையும் ஈரான், சீனா ஆகிய நாடுகளிலும் உங்களால் காண முடியும்.
இலங்கையில், ராமாயண கதையை “ஜானகி ஹரானா” என்ற பெயரில் கற்றுக் கொடுக்கவும், பாடவும் செய்கின்றனர். அதாவது, சீதா (ஜானகி) கடத்தல் என்ற பெயரில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அன்னை சீதா (ஜானகி) மூலம் நேபாளத்துடன் நேரடி தொடர்புடையவர் கடவுள் ராமர்.
உலகில் நம்பிக்கை அல்லது கடந்த காலம் மூலம் கடவுள் ராமரைப் போற்றும் மேலும் பல்வேறு நாடுகளும், பகுதிகளும் உள்ளன!
இன்றும் கூட, இந்தியாவுக்கு வெளியே, பல்வேறு நாடுகளிலும் ராமர் கதை என்பது அவர்களது பாரம்பரியத்தில் பிரபலமடைந்துள்ளன.
இந்த நாடுகளில் உள்ள மக்களும், ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியுள்ளதால், மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
கடவுள் ராமர் அனைவருக்குமானவர், அனைவரிடத்திலும் வாழ்கிறார்.
நண்பர்களே, கடவுள் ராமரைப் போலவே, இந்திய கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்துக்கு அடையாளமாக அயோத்தியில் கட்டப்படும் இந்த மாபெரும் கோயில் விளங்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
இங்கு கட்டப்படும் ராமர் கோயில், வரும் பல்வேறு ஆண்டுகளுக்கும் ஒட்டுமொத்த மனிதசமூகத்துக்கும் தொடர்ந்து உந்துசக்தியாக இருக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். எனவே, கடவுள் ராமரின் செய்தி, ராமர் கோயில் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நமது பாரம்பரியம் ஆகியவற்றை காலம் உள்ளவரை ஒட்டுமொத்த உலகுக்கும் சென்றுசேர்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
நமது புலமை மற்றும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு அறியச் செய்ய வேண்டியது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் பொறுப்பு.
இதனை மனதில் கொண்டு, ராமர் சென்ற வழித்தடத்தைப் பின்பற்றி, நாட்டில் ராமர் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
கடவுள் ராமருக்கான நகரம் அயோத்தி. அயோத்தியின் பெருமையை தானாகவே எடுத்துரைத்தவர் கடவுள் ராமர்.
““जन्मभूमि मम पूरी सुहावनि।।“ मम “न राम सदृश्यो राजा, प्रतिभ्याम नीतिवान अभूत।”, அதாவது, “நான் பிறந்த இடமான அயோத்தி தெய்வீகமான அழகு கொண்டது,” என்று தெரிவித்துள்ளார்.
கடவுள் ராமர் பிறந்த இடத்தின் பெருமை மற்றும் தெய்வீகத்தை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு வரலாற்றுப் பணிகள் மேற்கொள்ளப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
நண்பர்களே, புனித நூல்களான வேதங்களில், “न “न राम सदृश्यो राजा, प्रतिभ्याम नीतिवान अभूत। “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலகிலும் கடவுள் ராமரைப் போன்று நல்லொழுக்கமுள்ள ஆட்சியாளர் யாரும் கிடையாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“யாரும் வருத்தப்படக் கூடாது, யாரும் ஏழையாக இருக்கக் கூடாது,” என்று கடவுள் ராமர் போதிக்கிறார்.
ஆண்கள், பெண்கள் என அனைத்து மக்களுமே சரிசமமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சமூக செய்தியை கடவுள் ராமர் அளித்துள்ளார்.
“விவசாயிகள், மாடுமேய்ப்பவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்,” என்ற செய்தியை கடவுள் ராமர் அளித்துள்ளார்.
“வயதானவர்கள், குழந்தைகள், மருத்துவர்கள் ஆகியோரை எப்போதுமே பாதுகாக்க வேண்டும்” என்று கடவுள் ராமர் உத்தரவிட்டார்.
புகலிடம் கேட்டு வருபவர்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்று கடவுள் ராமர் அழைப்பு விடுத்தார்.
“சொர்க்கத்தைவிடவும் நமது தாய்நாடு பெரியது,” என்பதே கடவுள் ராமரின் மந்திரம்.
சகோதர, சகோதரிகளே, கடவுள் ராமரின் கொள்கை என்பது भयबिनु होइ नप्रीति. அதாவது, அச்சம் இல்லாமல் அன்பு எதுவும் கிடையாது.
எனவே, வலுவாக வளர்வது தொடரும் வரை, அமைதியானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இந்தியா இருக்கும்.
கடவுள் ராமரின் இதே கொள்கை மற்றும் செயல்பாடு, இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக வழிகாட்டியாக உள்ளது.
இந்த வழிமுறைகள் அடிப்படையிலேயே, ராமர் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேசத்தந்தை மகாத்மா காந்தி கனவுகண்டார். காந்தியின் ராமர் ஆட்சி கனவுக்கு ராமரின் வாழ்க்கை மற்றும் நடத்தை உந்துசக்தியாக திகழ்கிறது.
நண்பர்களே, கடவுள் ராமரே இவ்வாறு கூறியுள்ளார்-
देश काल अवसर अनुहारी।बोले बचन बिनित बिचारी
அதாவது, “காலம், இடம் மற்றும் சூழ்நிலைகள் அடிப்படையிலேயே ராமர் பேசுகிறார், சிந்திக்கிறார், செயல்படுகிறார்.”
காலத்துடன் எவ்வாறு நகர்வது மற்றும் வளர்வது என்பது குறித்து நமக்கு கடவுள் ராமர் போதிக்கிறார்.
மாற்றம் மற்றும் நவீனத்துவத்தை கடவுள் ராமர் வலியுறுத்துகிறார்.
கடவுள் ராமரின் இந்த கொள்கைகள் மற்றும் உந்துசக்திகளாலேயே இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது.
நண்பர்களே, நமது பணிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்று கடவுள் ராமர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அறிவை எவ்வாறு பெற வேண்டும் என்பதையும் அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.
அன்பு, மரியாதை மற்றும் சகோதரத்துவம் என்ற செங்கற்களால் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்.
கடவுள் ராமர் மீதான நம்பிக்கை தொடரும்வரை, மனிதசமூகம் வளர்ச்சி பெறும். கடவுள் ராமரின் வழியிலிருந்து விலகும்போது, பேரழிவை நோக்கி செல்லும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
அனைவரின் உணர்வுகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். நாம் ஒன்றாக இருக்க வேண்டும், ஒன்றாக வளர வேண்டும், ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நமது முயற்சிகள் மற்றும் தீர்மானங்கள் மூலம் நம்பிக்கை மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டியது அவசியம்.
நண்பர்களே, தமிழ் ராமாயணத்தில் கடவுள் ராமர், “காலம் தாழ ஈண்டு இனும் இருத்தி போலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, “நாம் தாமதிக்காமல், முன்னோக்கி நடைபோட வேண்டும்,” என்பதே அதன் பொருள்.
இன்றைய இந்தியாவுக்கும், நம் அனைவருக்கும் கடவுள் ராமர் அதே செய்தியை அளிக்கிறார்.
நாம் முன்னோக்கி செல்வோம், நமது நாடு முன்னேற்றம் பெறும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ராமரின் இந்த ஆலயம், வரும் ஆண்டுகளுக்கும் மனிதநேயம் மற்றும் மனிதகுலத்துக்கு தொடர்ந்து உந்துசக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.
இன்றைய கொரோனா பெருந்தொற்று சூழலில், கடவுள் ராமரின் சுய கட்டுப்பாட்டு வழிகள் அவசியமாகிறது. பாதுகாப்பான அளவான 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் மற்றும் எப்போதும் முகக்கவசத்தை அணிய வேண்டும்.
எனது நாட்டை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க கடவுள் ராமரை வணங்குகிறேன்.
சீதா அன்னையும், கடவுள் ராமரும் தங்களது ஆசிகளை அனைவருக்கும் வழங்கட்டும்.
இதனுடன், இந்தத் தருணத்தில் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போற்றுவோம்! சீதையின் கணவர் கடவுள் ராமச்சந்திரர் வாழ்க!!!
(Release ID: 1643686)
Visitor Counter : 372
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam