நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஜூலை மாதத்தில் 23.69 எல்எம்டி உணவு தானியங்கள் சுமார் 47.38 கோடி பயனாளிகளுக்கு விநியோகம்

Posted On: 04 AUG 2020 9:22PM by PIB Chennai

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 23.80 எல்எம்டி உணவு தானியங்கள், 47.38 கோடி பயனாளிகளுக்கு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் விநியோகிக்கப்பட்டுள்ளன.  பிரதமரின் கரீப் கல்யாண் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், விநியோகிக்கப்படும் உணவு தானியங்களுக்காக மத்திய அரசு சுமார் ரூ.76,062 கோடி செலவை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டுள்ளது.

     இந்திய உணவுக் கழகத்தின், 03.08.2020 தேதியிட்ட அறிக்கையின்படி, 242.87 எல்எம்டி அரிசியும், 516.54 எல்எம்டி கோதுமையும் என மொத்தம் 759.41 எல்எம்டி உணவு தானியங்கள், உணவுக் கழகத்திடம் கையிருப்பில் உள்ளன.

     பிரதமரின் கரீப் கல்யாண் முதல்கட்ட திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்தில் 37.43 எல்எம்டி உணவு தானியங்கள், 74.86கோடி  பயனாளிகளுக்கும், மே மாதத்தில் 37.43 எல்எம்டி உணவு தானியங்கள் 74.82 கோடி பயனாளிகளுக்கும், ஜூன் மாதத்தில் 36.19 எல்எம்டி உணவு தானியங்கள், 72.38 கோடி பயனாளிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இந்த 3 மாதங்களில் மொத்த சராசரி விநியோகம் 93 விழுக்காடாக இருந்தது.

-----



(Release ID: 1643470) Visitor Counter : 134