சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இருசக்கர வாகன ஹெல்மட்டுகளுக்கு BIS சான்றிதழை அமல்படுத்துவது குறித்த பொது பரிந்துரைகளை கேட்டறிகிறது.

Posted On: 01 AUG 2020 1:16PM by PIB Chennai

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசங்களை (ஹெல்மெட்) இந்தியத் தர நிர்ணயச் சட்டம் 2016 இன் படி, கட்டாயச் சான்றின் கீழ் கொண்டு வருவதற்கான வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய BIS சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் (ஹெல்மெட்) மட்டுமே வைத்திருக்க இது உதவும். இது இரு சக்கர வாகன தலைக்கவசங்களின் (ஹெல்மட்டுகளின்) தரத்தை மேம்படுத்துவதோடு, சாலைப் பாதுகாப்பு சூழ்நிலையையும் மேம்படுத்தும், மேலும் இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்க இது மேலும் உதவியாக இருக்கும்.

 

இது தொடர்பான பரிந்துரைகள் அல்லது கருத்துகளை இணை செயலாளர் (MVL), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம், போக்குவரத்து பவன், பாராளுமன்ற வீதி, புது தில்லி -110001 (மின்னஞ்சல்: jspb-morth[at]gov[dot]in)) என்ற முகவரிக்கு  முப்பது நாட்களுக்குள் அனுப்பலாம்.  

 

***



(Release ID: 1642843) Visitor Counter : 166