நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், விதிமுறைகளின்படி பயனாளிகளை அடையாளம் காணும் அளவுகோல் நாடு முழுவதும் ஒரே சீராக உள்ளது; பயனாளிகளை அடையாளம் காண்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொறுப்பு - மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை.
Posted On:
30 JUL 2020 2:27PM by PIB Chennai
பீகாரில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-இன் படி பயனாளிகள் தேர்வில் பாகுபாடு உள்ளதாகவும், தவறான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. சில அளவுகோல்களின்படி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என்றும், அந்தப் பொறுப்பு மாநில அரசுகளிடம் தான் உள்ளது என்றும் அது கூறியுள்ளது. பீகாரில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப் பயனாளிகளை அடையாளம் காண்பதில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும், அதில் எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் விதிமுறைகளின்படி, பயனாளிகளை அடையாளம் காணுவதில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013, பீகாரில் 25 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்கள் உள்பட மொத்தம் 8.71 கோடி பயனாளிகளுக்கு பலனளித்து வருகிறது.
2020 மே மாதத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் , 100 சதவீதப் பயன்பாடு, அதாவது 8.71 கோடி பேர் என்ற வகையில், மாதாந்திர ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு உணவு மற்றும் பொது விநியோகத் துறையிடம் பீகார் மாநிலம் கேட்டுக்கொண்டதாக அத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் வேண்டுகோளை விரைவாகப் பரிசீலித்து, மத்திய அரசு பீகாரில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப் பயனாளிகள் முழுவதுமாகப் பயன்படுத்தும் வகையில் அதிகபட்சமாக 8.71 கோடி பேருக்கு ஒப்புதல் வழங்கியது.
-------
(Release ID: 1642323)
Visitor Counter : 195