உள்துறை அமைச்சகம்

‘தேசிய கல்விக் கொள்கை 2020’-ஐ மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா வரவேற்றுள்ளார்

Posted On: 29 JUL 2020 8:59PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை 2020’- மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வரவேற்றுள்ளார்இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,   “எந்த ஒரு நாட்டிற்கும் கல்வி அடிப்படைத் தேவை என்றும்கடந்த 34 ஆண்டுகளாக, அதற்கான எதிர்காலத் தேவைக்கேற்ற கொள்கை ஏதுமின்றி, இந்தியா தவித்து வந்தது. புதிய இந்தியாவைப் படைப்பதில் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியப் பங்கு வகிக்க உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவை மேற்கொண்டதற்காக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர்.ரமேஷ் பொக்ரியால் நிஷாங் ஆகியோருக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்

இந்தியக் கல்வி முறையில், இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க தினம் என்றும் திரு.அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்தொலைநோக்குடன் கூடிய தலைமைப் பண்பு கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான  ‘தேசிய கல்விக் கொள்கை 2020‘ -க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇது பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்குத் தேவையான வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களைக் கொண்டதாகும்.  

கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளைக் கைவிடும் எந்தவொரு நாடும் சிறந்து விளங்க முடியாதுஇந்தியாவின் பாரம்பரியத்தை வேரூன்றச் செய்யும் கல்வி முறையை உருவாக்குவது தான்,    பிரதமர் திரு.நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கம் என்றும்அனைவருக்கும் உயர் தரக் கல்வியை வழங்குவதன் மூலம்உலகில் அறிவாற்றலில் தலைசிறந்த நாடாக இந்தியாவை  இது உருவாக்கும்என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

தேசிய கல்விக் கொள்கை 2020‘ சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சென்றடையும்இதனை  உறுதி செய்ய சிறப்புக் கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.   உயர் கல்வியில் மொத்த சேர்க்கை வீதத்தை அதிகரிக்க, தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் திரு.அமித் ஷா தெரிவித்துள்ளார்

பள்ளிக் கல்வி முறையில் 5 + 3 + 3 + 4  வகுப்புமுறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள், தேசிய கல்விக் கொள்கை-2020-ல் உள்ளதோடு, புதிய 4 ஆண்டு பட்டப் படிப்பு முறை அறிமுகம், ஒற்றை அம்ச பொது கட்டுப்பாட்டு அமைப்பு, கட்டண நிர்ணயம் மற்றும்  வாரியத்தின் கட்டமைப்புக்கு உட்பட்ட பொதுவான விதிமுறைகளுடன், உயர் கல்வியில் பல்முனை நுழைவு மற்றும் வெளியேறும் வசதி  போன்றவற்றைக் கொண்டதாகவும் உள்ளது“  என மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

கல்வி வரவு வங்கி, பின்தங்கிய பகுதிகளுக்கு சிறப்புக் கல்வி மண்டலம்கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயாக்களை 12நிலைகளைக் கொண்டதாக  தரம் உயர்த்துதல் மற்றும் ஆரம்பக் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற அம்சங்களும், தேசிய கல்விக் கொள்கை-2020-ல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஒட்டுமொத்த மற்றும் பல்நோக்கு அணுகுமுறைகள் மூலம், இந்தியக் கல்வி முறையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதே, தேசிய கல்விக் கொள்கை-2020-ன் நோக்கம். பல்வேறு அம்சங்களிலும் சிறப்புக் கவனம் செலுத்துவது, நாடு முழுவதுமுள்ள குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்என்றும் திரு.அமித் ஷா கூறியுள்ளார்
 

*****



(Release ID: 1642305) Visitor Counter : 167