சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் மொத்தம் 1.77 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது

பத்து லட்சம் பேரில் பரிசோதனை செய்யப்பட்டவர் எண்ணிக்கை 12,858 ஆக அதிகரித்துள்ளது

प्रविष्टि तिथि: 29 JUL 2020 4:40PM by PIB Chennai

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறிந்து தனிமைப்படுத்தப் படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து எட்டாயிரத்து 855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் பேரில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 1.77 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பரிசோதனை ஆய்வுக் கூட அமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறையில் 906 ஆய்வுக் கூடங்களும். தனியார் துறையில் 410 ஆய்வுக் கூடங்களும் உள்ளன.

 

ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 675 (அரசு 411 தனியார் 264 )

ட்ரூ நாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 537 (அரசு 465 தனியார் 72)

சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான ஆய்வுக்கூடங்கள் 104 (அரசு 30 தனியார் 74)

****


(रिलीज़ आईडी: 1642229) आगंतुक पटल : 294
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam