ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் கடலோர கப்பல் போக்குவரத்து மூலம் உரங்களைக் கொண்டு செல்கிறது

Posted On: 29 JUL 2020 3:51PM by PIB Chennai

இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT), நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்கான புதிய போக்குவரத்து முறையாக கரையோர கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது.

உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT), வழங்கிய அறிக்கையின்படி, FACT நிறுவனத்தின் தலைவரும், இயக்குநருமான திரு கிஷோர் ருங்க்தா மற்றும் கொச்சின் துறைமுக அறக்கட்டளை தலைவரான டாக்டர் பீனா இருவரும் ஒருங்கிணைந்து FACT உதயகமண்டல் காம்ப்ளக்ஸ், லூரில் நேற்று நடைபெற்ற விழாவில் 560 மெட்ரிக் அம்மோனியம் சல்பேட்டுடன் முதல் தொகுதி சரக்குக் கப்பலை கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்

மேற்கு வங்காளத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக மொத்தம் 20 கன்டெய்னர்கள் அம்மோனியம் சல்பேட் ஹால்டியா துறைமுகத்திற்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. 560 மெட்ரிக் டன் அம்மோனியம் சல்பேட்டுடன் கூடிய “எஸ்எஸ்எல் விசாகப்பட்டினம்” கப்பல் ஜூலை 30ஆம் தேதி கொச்சின் துறைமுகத்திலிருந்து பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியில் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்திற்கு, கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் ஆதரவு கிடைக்கிறது. கடலோரக் கப்பல் போக்குவரத்து வழியாக கொண்டு செல்லப்படும் உரங்கள், மேலும் தேவையான இலக்கை அடைய துறைமுகங்களில் இருந்து ரயில் வழியாக கொண்டு செல்லப்படும்.

கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் துணைத் தலைவர் திரு. ஏ கே மெஹெரா, போக்குவரத்து மேலாளர் விபின் ஆர் மேனோத், கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் ஆலோசகர் கவுதம் குப்தா மற்றும் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் திருவிதாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் (சந்தைப்படுத்தல்) அனில் ராகவன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய போது, கோவிட் – 19 தொற்றுநோயின் காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், கடல் பாதை வழியாக உரங்களை அனுப்புவது ரயில் மற்றும் சாலை வழியாக உரங்களை கொண்டு செல்வதற்கான அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும், கடலோர மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான பொருள்ள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கரையோரக் கப்பல் போக்குவரத்து பெரிதும் உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

******



(Release ID: 1642228) Visitor Counter : 126