பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ்வரும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) , பழங்குடியினர் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் உள்ளடக்கிய டிஜிட்டல்மயமாக்கல் இயக்கத்தை தொடங்கியுள்ளது

Posted On: 28 JUL 2020 12:31PM by PIB Chennai

பழங்குடியினர்  விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ்வரும் இந்திய பழங்குடியினர்  கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) , பழங்குடியினர் வர்த்தகத்தை மட்டும் மேம்படுத்துவதற்கான அனைத்தையும் உள்ளடக்கிய டிஜிட்டல்மயமாக்கல் இயக்கத்தை, வாழ்வின்  அனைத்து அம்சங்களும் ஆன்லைன் வழியாக இயங்கி வரும் தருணத்தில் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம், கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியின உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் வரைபடமாக்கி, இணைக்கிறது. இதற்காக சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட கலைநயம் மிகுந்த மின்னணு தளங்களை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின வர்த்தகத்தை திறம்பட மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பழங்குடியினர்  விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ்வரும் இந்திய பழங்குடியினர்  கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு, வனவாசிகள் தொடர்பான வன் தன் யோஜனா, கிராம சந்தைகள் மற்றும் அவர்களது பண்டகசாலைகள் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் டிஜிட்டல்மயமாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியில் அனைத்து பழங்குடியினர் கிளஸ்டர்களும் அடையாளம் காணப்பட்டு, ஜி.ஐ.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்குவது, பிரதமர் விடுத்த தற்சார்பு இந்தியா அழைப்பின் கீழ் இந்த மக்களுக்கு பயன்களை கொண்டுவர உதவும்.

 

இந்த சிக்கலான காலங்களில் – உள்ளூருக்காக குரல் எழுப்புங்கள்” என்ற மந்திரத்தை ‘எனது வனம், எனது பணம், எனது நிறுவனம்' என்று மாற்றி அமைத்து, ட்ரைபெட்-TRIFED பல்வேறு புதுமையான முன்முயற்சிகளை, தற்போதைய முதன்மை  திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுபோன்ற காலங்களில் துன்புறும் பழங்குடியினருக்கு இவை அருமருந்தாக உருவெடுத்துள்ளது. பழங்குடியினர்  விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ்வரும் இந்திய பழங்குடியினர்  கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க முயற்சிகள் சமீப காலங்களில் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தலைமுறைக்கான வாழ்வாதாரத்திற்கு இந்த கடினமான காலங்களில் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

 

திடீரென ஏற்பட்டுள்ள நோய் தொற்று பரவலால் நமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,உடனடி ஊரடங்கால் பழங்குடியின கைவினைஞர்களின் ரூ. 100 கோடி மதிப்பீலான இருப்புகள் விற்பனையாகாமல் உள்ளன. இந்த இருப்புகள் அனைத்தும் விற்பனையாதை உறுதி செய்து, அதன் மூலம் கிடைக்கும் விற்பனை வருவாய், பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பத்தினருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், ட்ரைபெட் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலை பொருட்களை வாங்கியதுடன், விற்பனையாகாமல் இருக்கும் பொருட்களை ஆன்லைன் மூலம் (கணிசமான தள்ளுபடிகளுடன்) Tribes India   வலைதளத்திலும் மேலும், இதர சில்லறை வணிகதளங்களான அமேசான், ப்ளிப்கர்ட் மற்றும் ஜி.இ.எம் வழியாகவும் சந்தைப்படுத்தும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

*****



(Release ID: 1641802) Visitor Counter : 170