பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

உன்னத் பாரத் அபியான் திட்டத்திற்காக, ட்ரைஃபெட்,ஐஐடி தில்லியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 25 JUL 2020 4:25PM by PIB Chennai

பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் பல அமைப்புகளில், மத்திய பழங்குடியின விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ட்ரைபெட் மிக முக்கியமான பங்கு வகித்து பழங்குடியின மக்களை தேசிய நீரோட்டத்துடன் இணைந்து வளர்ச்சியுறச் செய்து வருகிறது. இதற்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின், முதன்மைத் தேசியத் திட்டமான உன்னத் பாரத் அபியான்- உன்னத இந்தியா திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக தில்லி ஐஐடி யுடன் ட்ரைபெட் இணைந்து செயல்படுத்த உள்ளது.

 

இவ்வாறு இணைந்து செயல்படும் முயற்சிகளை ஏற்படுத்துவதற்காக முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ட்ரைபெட், ஐஐடி தில்லி (உன்னத இந்தியா திட்டத்தின் சார்பாக தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பு என்ற முறையில்), விஞ்ஞான பாரதி (விபா - சுயேச்சையான அறிவியல் இயக்கம் ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கிடையே நேற்று ஐஐடி தில்லியில் கையெழுத்திடப்பட்டது. ட்ரைபெட் அமைப்பின் வன் தன் திட்டத்தின் கீழ் உள்ள பழங்குடியின தொழில் முனைவோர், உன்னத இந்தியா திட்டத்தின் கீழ் 2600க்கும் அதிகமான கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களின் அனைத்து நிபுணத்துவத்தையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001IDTT.jpg

உன்னத இந்தியா திட்டத்தில் தேசியஒருங்கிணைப்பு அமைப்பான தில்லி ஐஐடி யுடன் இணைந்து ட்ரைபெட் செயல்பட்டு மற்ற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் ,தொண்டு நிறுவனங்கள், இதர பங்குதாரர்கள், பிற அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பல்வேறு திட்டங்கள் மூலமாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு வருவாய் ஈட்டித்தரும் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காகவும் இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள வன் தன் விகாஸ் கேந்திரங்கள் மூலமாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

 

சுதேசி மனப்பாங்குடன் கூடிய விஞ்ஞான பாரதி என்ற அறிவியல் இயக்கத்தின் அனுபவமும் நிபுணத்துவமும் பழங்குடியின மக்களிடையே அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தற்போதைய நிலையில் எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்தும், அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான முறைகள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு எடுத்துக் கூறப்படும். விபா தனது உள்ளூர் கிளைகள் மூலமாக வன் தன் யோஜனா திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும். ட்ரைபெட்,  உன்னத இந்தியா திட்டம், பழங்குடியின சமூகம் ஆகிய முத்தரப்புக்குமிடையே முக்கியமான தகவல்களை சேகரித்து பரிமாறிக் கொள்ளும் பணிக்கு விபா உதவி செய்யும். வன் தன் யோஜனா திட்டத்தின் பழங்குடியினப் பயனாளிகள் சேவைக்கே தொழில்நுட்பம் டெக்4சேவா தகவல்களை இதற்கான இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.  அடிப்படைக் அளவில் அடையாளம் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவியல்பூர்வமான, நிரந்தரமான தீர்வுகளைக் காண்பதற்காக தொழில்நுட்பச் சேவை வழங்குபவர்களின் கற்பனைத் திறனும் உதவும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

 

உன்னத இந்தியா திட்டத்தின் கீழ் ஐடிகள், என் ஐ டி கள், டிபிடி, ஐ சி ஏ ஆர், ஐ சி எம் ஆர்,எம் ஜி ஐ ஆர் , ஐ சி எஸ் ஐ ஆர் ஆய்வுக்கூடங்கள், ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி ஓ, பாதுகாப்புத்துறை ஆய்வுக்கூடங்கள், பி ஏ ஆர் சி போன்ற பல்வேறு கல்வி ஆராய்ச்சி அமைப்புகளையும், சமுதாய அமைப்புகளான தொண்டு நிறுவனங்கள், பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், சமூகம் சார்ந்த அமைப்புகள், சமூகப் பொறுப்புணர்வுள்ள கார்ப்பரேட்டுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிகச் சிறந்த கட்டமைப்பு ஒன்றை ஐஐடி, தில்லிஉருவாக்கியுள்ளது. தற்போது உன்னத இந்தியா திட்டத்தின் கீழ் 44 மண்டல ஒருங்கிணைப்பு அமைப்புகள்,13 நிபுணத்துவம் வாய்ந்த குழுக்கள், குறிப்பிட்ட நிபுணத்துவம் பெற்ற ஆலோசகர்கள்,2600க்கும் மேற்பட்ட அமைப்புகள், பழங்குடியின மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதற்காகவும் செயல்படுவர்.

*****



(Release ID: 1641263) Visitor Counter : 1081