நிதி அமைச்சகம்
மத்திய நேர்முக வரிகள் வாரியம் (CBDT), மத்திய சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
Posted On:
20 JUL 2020 6:55PM by PIB Chennai
மத்திய நேர்முக வரிகள் வாரியம் (CBDT) யும், மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைச்சகமும், சி பி டி டி-யின் தரவுகளை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்வது குறித்து முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சி பி டி டி -யின் வருமானவரி கணினி அமைப்பு முதன்மைத் தலைமை இயக்குநர் திருமதி. அனு ஜே சிங்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், மேம்பாட்டு ஆணையருமான திரு. தேவேந்திர குமார் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
வருமான வரி தாக்கல் தொடர்பாக சில தரவுகள் வருமான வரித்துறையிடமிருந்து எம் எஸ் எம் இ அமைச்சகத்திற்கு பகிர்ந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இவ்வாறு பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் எம்எஸ்எம்இ அமைச்சகம், எம்எஸ்எம்இ அமைச்சகத்தால் 26/06/2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் எஸ் ஓ 2119 E படி தொழில் நிறுவனங்களை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் என பிரிக்க முடியும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வரும். தரவுகள் பரிமாறிக் கொள்ளப்படும் நடைமுறைகளுக்காக இரண்டு அமைப்புகள் சார்பிலும் மைய அலுவலர்கள், மாற்று மைய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
சிபிடிடி, எம்எஸ்எம்இ ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் நிலவும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இந்த ஒப்பந்தம் அமைகிறது
****
(Release ID: 1640023)
Visitor Counter : 316