தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் – ஜூன் 2020

Posted On: 20 JUL 2020 3:16PM by PIB Chennai

வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (1986 – 87 = 100 என்ற அடிப்படையிலானது), 2020 ஜூன் மாதத்தில் ஒரு புள்ளி குறைந்து, 1018 ஆக இருந்தது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணும் ஒரு புள்ளி குறைந்து, ஜூன் மாதத்தில் 1024 ஆக இருந்தது. அரிசி, பருப்பு வகைகள், நல்லெண்ணெய், ஆட்டிறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால் குறியீட்டு எண்ணும் குறைந்துள்ளது.

இந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணில் உள்ள ஏற்ற இறக்கங்கள், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகின்றன. வேளாண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 9 மாநிலங்களில் இது 1 முதல் 7 புள்ளிகள் வரை கூடியிருந்தது மற்றும் 9 மாநிலங்களில் 1 முதல் 19 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தமிழ்நாட்டில் இந்த குறியீட்டு எண் 1214 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது.

கிராமப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்த குறியீட்டு எண் 9 மாநிலங்களில் 1 - 8 புள்ளிகள் வரை அதிகரித்தும், 10 மாநிலங்களில்
2 - 20 புள்ளிகள் வரை குறைந்தும் இருந்தது. தமிழ்நாட்டில் இந்த குறியீட்டு எண் 1199 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

 

*****



(Release ID: 1639919) Visitor Counter : 196