அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பணியிடங்களுக்கான கோவிட் பாதுகாப்பு முறையை துர்காபூர் சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ வெளியிட்டுள்ளது.

Posted On: 19 JUL 2020 12:04PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில்மத்திய எந்திரப் பொறியில் ஆராய்ச்சி நிறுவனம், CSIR-CMERI, துர்காபூர், நடப்புத் தொற்றுச் சூழலில் பணியிடங்களுக்கான பாதுகாப்பு முறையை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய துர்காபூர், CSIR-CMERI, நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் ஹரீஷ் ஹிரானி, “சுகாதாரப் பணியாளர்கள் தவிர, பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது அசுத்தமான பொருள்கள் மூலம், எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் முன்களப் பாதுகாப்பு பணியாளர்கள் கோவிட் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள். துர்காபூர் மத்திய எந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில், மின்னணு நுழைவு மேலாண்மை முறையை உருவாக்கவுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில்இது இயங்கும்பணியிடங்களுக்கான இந்த முறையானது தொடுதல் இல்லாத சூரியசக்தி அடிப்படையிலான நுண்ணறிவு தானியங்கி முகக்கவசம் வழங்கும் அலகுவெப்பமானி, தொடுதல் இல்லாத குழாய், 360 டிகிரி கார் சுத்திகரிப்பான் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை தற்போது தொழில்நுட்ப மாற்றம் மற்றும் உற்பத்தி தருவிப்புகளாகக் கிடைக்கிறது’’ என்றார்.

பின்வரும் தொழில்நுட்பங்களின் கூட்டுக்கலவை கோவிட் பாதுகாப்பு முறை;

1.         சூரியசக்தி அடிப்படையிலான நுண்ணறிவு தானியங்கி முகக்கவசம் வழங்கும் அலகு மற்றும்  வெப்பமானி-இது ஒரு நுண்ணறிவுக் கண்காணிப்பு அமைப்பாகும். அதில் உள்ள மென்பொருள் மூலம், தனிநபர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதையும், அவர்களது உடல் வெப்ப நிலையையும் கண்டறியும்.

2.         தொடுதல் அல்லாத குழாய்- இது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்காக தொடங்கப்பட்டு வருகிறது. இது சோப்பு திரவத்தையும், தண்ணீரையும் 30 வினாடி இடைவெளியில் ஒரே குழாய் மூலம் வெளியேற்றும். இது அரசின் தற்போதைய விதிமுறைகளின்படி இயங்கும்.

3.         360 டிகிரி கார் சுத்திகரிப்பான்- இதனை CSIR-CMERI உருவாக்கியுள்ளது. சோடியம் ஹைப்போகுளோரைட் தண்ணீர் திரை , சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குழாய் முனையிலிருந்து கிருமிநாசினி கலந்த தண்ணீர் காரின் மேற்பரப்பு மற்றும் கீழ் பகுதி/சக்கரங்களில் உரிய அழுத்தத்துடன் சீராக பரவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

*****



(Release ID: 1639776) Visitor Counter : 216