சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நிலையான முன்னேற்ற இலக்குகள் (SDG) மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) ஆகியவற்றிற்கான பேறு கால தாய் இறப்பு விகிதம் (MMR) இலக்குகளை அடைவதற்கான பாதையில் இந்தியா: டாக்டர் ஹர்ஷ் வர்தன்.

Posted On: 17 JUL 2020 6:01PM by PIB Chennai

பேறு காலத்தில் தாய் இறப்பு விகிதத்தில் (MMR) இந்தியா அடைந்த வெற்றி குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “இந்தியாவில் பேறு காலத்தில் தாய் இறப்பு விகிதம் (MMR) ஒரு வருடத்தில் 9 புள்ளிகள் குறைந்துள்ளதாக இந்திய பதிவாளர் ஜெனரலின் MMR குறித்த சிறப்பு செய்திக் குறிப்பு வெளியிட்டது. இந்த விகிதம் 2015-17இல் 122 லிருந்து 2016-18இல் 113 ஆக குறைந்துள்ளது (7.4% சரிவு).” 2011-2013 இல் 167, 2014-2016 இல் 130, 2015-17இல் 122, மற்றும் 2016-18 இல் 113 ஆக இருப்பதன் மூலம் பேறு கால தாய் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கும் நிலைக்கு நாடு முன்னேற்றம் கண்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார்.

நிலையான முன்னேற்ற இலக்குகளுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “தொடர்ச்சியான இந்தச் சரிவுடன், 2030க்குள் லட்சம் பேரில் 70 பேர் என்ற நேரடி பிறப்புகளின் SDG மற்றும் 2020க்குள் 100 / நேரடி பிறப்புகளின் தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா உள்ளது. இந்த SDG இலக்கை அடைந்த மாநிலங்களின் எண்ணிக்கை இப்போது 3இல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது. அவை கேரளா (43), மகாராஷ்டிரா (46) தமிழ்நாடு (60), தெலுங்கானா (63) மற்றும் ஆந்திரா (65). மேற்கூறிய ஐந்து மாநிலங்களுடன் ஜார்கண்ட் (71), குஜராத் (75), ஹரியானா (91), கர்நாடகா (92), மேற்கு வங்காளம் (98) மற்றும் உத்தரகண்ட் (99) ஆகிய 11 மாநிலங்களும் NHP நிர்ணயித்த MMR இலக்கை எட்டியுள்ளன.

MMR மூன்று மாநிலங்களான பஞ்சாப் (129), பீகார் (149), ஒடிசா (150) ஆகிய இடங்களில் 100-15 க்கு இடையில் உள்ளது என்றும், ஐந்து மாநிலங்களில் அதாவது சத்தீஸ்கர் (159), ராஜஸ்தான் (164), மத்தியப்பிரதேசம் (173), உத்தரப்பிரதேசம் (197), அசாம் (215), ஆகிய இடங்களில் MMR 150க்கு மேல் உள்ளது என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலங்கள் (அதிகபட்சமாக 22 புள்ளிகள் சரிவைக் காட்டியுள்ளன), உத்தரப்பிரதேசம் (19 புள்ளிகள்), ஒடிசா (18 புள்ளிகள்) பீகார் (16 புள்ளிகள்), மத்தியப் பிரதேசம் (15 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார். இரண்டு மாநிலங்கள் (தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா) MMRஇல் 15 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைக் காட்டியுள்ளன, அதே நேரத்தில் ஒடிசா, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்கள் 10 முதல் 15 சதவீதத்திற்கு இடையில் சரிவைக் காட்டியுள்ளன. ஏழு மாநிலங்கள். கர்நாடகா, அசாம், ஜார்க்கண்ட், ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை 5 முதல் 10 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

மாநில அரசாங்கங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்து, டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “குறிப்பிடதக்க அளவில் அதிக வெற்றிகளை அடைவதற்கு, தரம் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதுடன், தேசிய சுகாதாரக் கொள்கை (NHP) கீழ் Janani Shishu Suraksha Karyakram (ஜானி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம்), Janani Suraksha Yojana (ஜனனி சுரக்ஷா யோஜனா) மற்றும் புதிய திட்டங்களான LaQshya லாக்ஷ்யா மற்றும் பிரதமரின் பாதுகாப்பான தாய்மைப் பிரச்சாரம் போன்ற திட்டங்கள் மூலம் அரசாங்கம் எடுத்த தீவிர முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம்.

மத்திய அரசின் சுமன் (SUMAN) திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் பேறு காலப் பாதுகாப்பு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துதல், இலவச மற்றும் தரமான சேவைகளுக்கான பரந்த அணுகலை உள்ளடக்கியது, மேலும் மகப்பேறு பராமரிப்புடன் சேவைகளை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத அளவுக்கு பரவலாக அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

****



(Release ID: 1639497) Visitor Counter : 296