குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தோல் பணி கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தில்லியில் நவீன காலணி பயிற்சி மையத்தை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் துவக்கி உள்ளது

Posted On: 16 JUL 2020 5:38PM by PIB Chennai

விளிம்பு நிலையில் உள்ள தோல் பணி கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி), தில்லியில் நவீன காலணி பயிற்சி மையத்தை இன்று துவக்கி உள்ளது.

மத்திய சிறு குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் கீழ் ஆக்ராவில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் (சிஎஃப்டிஐ) தொழில்நுட்ப உதவியுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லி ராஜ்காட்டில் நிறுவப்பட்டுள்ள “கேவிஐசி-சிஎஃப்டிஐ காலணி பயிற்சி மற்றும் உற்பத்தி மையம் “உயர் ரக காலணிகளைத் தயாரிப்பதற்கான, ஒருங்கிணைந்த இரண்டு மாத காலப் பயிற்சியை, தோல் பணி கலைஞர்களுக்கு அளிக்க உள்ளது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, சொந்தமாக ஷூ தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கான உதவியையும் இந்த மையம் செய்ய உள்ளது. இந்தக் கலைஞர்களின் வருங்காலப் பணிகளுக்கு உதவும் வகையில் ரூ.5,000 மதிப்புள்ள கருவிகளும் அளிக்கப்பட உள்ளன.

*****


(Release ID: 1639265) Visitor Counter : 171