வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சர்வதேச வலு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை முன்னெடுப்பதில் பரஸ்பரம் பகிரப்பட்ட வலுவான ஆர்வங்களின் செயல்பாட்டால் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அடைந்திருக்கிறது என்று திரு பியூஸ் கோயல் வலியுறுத்தி உள்ளார்
இந்தியா-அமெரிக்க தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு 2020 நடைபெற்றது
Posted On:
15 JUL 2020 1:25PM by PIB Chennai
இந்தியா-அமெரிக்கா இடையேயான தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டம் டெலிகான்பரன்ஸ் முறையில் ஜூலை 14-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தியா-அமெரிக்கா அரசுகளால் 2014-ஆம் ஆண்டு டிசம்பரில் மறுசீரமைக்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரு நாட்டுகளின் பரஸ்பர பொருளாதார நலன்களுக்காக மேலும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான பகுதிகளைக் கண்டறிவது மற்றும் வணிக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய விஷயங்கள் குறித்து முன்னிலைப்படுத்துவதற்கான பயனுள்ள தளமாக இந்தக் கூட்டமைப்பு திகழ்கிறது.
மத்திய வணிக, தொழில்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல், அமெரிக்கத் தரப்பில் அந்நாட்டின் வணிகத்துறை அமைச்சர் திரு வில்பர் ரோஸ் ஆகியோர் இணைந்து இந்த சந்திப்புக்குத் தலைமையேற்றனர். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளர் டாக்டர் திரு. குருபிராசத் மொஹபாத்ரா, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் திரு.தரண்ஜித்சாந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு கென்னெத் ஜெஸ்டெர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னணி இந்திய, அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைக் கொண்ட சிஇஓ கூட்டமைப்பில் டாடா சன்ஸ் தலைவர் திரு.என். சந்திரசேகரன், லாக்ஹீத் மார்டின் தலைமைச் செயல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் திரு ஜேம்ஸ் தாய்செல்ட் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற முந்தைய தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்புக் கூட்டத்தின் போது முன்வைக்கபட்ட பரிந்துரைகளின் அடிப்படையிலான கொள்கை வழிமுறைகளை சட்டமாக்குதல், மறுசீரமைப்பை அமல்படுத்துதல் ஆகியவை குறித்து இரண்டு தரப்பையும் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள் இரு நாடுகளையும் பாராட்டினர். பொதுசுகாதாரம் மற்றும் மருந்துகள, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் உற்பத்தி , தொழில்முனைவு மற்றும் சிறுநிறுவனங்களை முன்னெடுத்தல், எரிசக்தி, தண்ணீர், சுற்றுச்சூழல் ஐசிடி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, நிதி சேவைகள் , வணிகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுடன் இதர துறைகளை உள்ளடக்கிய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் மேலும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளை ஊக்கப்படுத்துதல் குறித்த புதிய மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகளை தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டாக விவாதித்து கூட்டத்தில் முன் வைத்தனர்.
தம்முடன் இணைந்து பங்கேற்ற மத்தியமைச்சர் பியூஸ் கோயல், இருநாட்டு உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பங்கேற்ற தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அமெரிக்க அமைச்சர் ரோஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்றின் சவாலான தருணம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான விநியோகத் தொடர்புகள், மருந்துகள் ஆகியவற்றில் இரு நாடுகளும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திருப்பபதாக கூறினார்.
சர்வதேச வலு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை முன்னெடுப்பதில் பரஸ்பரம் பகிரப்பட்ட வலுவான ஆர்வங்களின் செயல்பாட்டால் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அடைந்திருக்கிறது என்று திரு பியூஸ் கோயல் வலியுறுத்தியுள்ளார். இருநாட்டுப் பொருளாதாரத்திலும் சிறுதொழில்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தத் துறையில் திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார். கோவிட்-19க்கு பிந்தைய உலகில் ஒரு புதிய பாதையை உருவாக்கக் கூடிய தலைவர்களாக தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு திகழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா தரப்பில் இணைந்து பங்கேற்ற திரு.தாய்செலட், கோவிட்-19 தருணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர அசாதாரண ஒத்துழைப்பானது கட்டமைப்பை உருவாக்குதல், இருநாடுகளுக்கு இடையே முதலீடுகளை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றிலும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். சில துறைகளில் கட்டுப்பாடற்ற வெளிநாட்டு உரிமையின் பகுதிகளை அவர் எடுத்துரைத்தார். கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் முன்கணிப்பு, சரியான தருணத்தில் தகராறுகளுக்குத் தீர்வு காணுதல், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பில் தொடர் முதலீடு ஆகியவை முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளாக இருக்க வேண்டும் என்றார்.
இந்திய தரப்பின் இணை பங்கேற்பாளர் திரு.சந்திரசேகரன், புவி அரசியல் மற்றும் வர்த்த உறவுப் பிரச்சினைகள் காரணமாக சர்வதேச விநியோகச் சங்கிலிகளை மறுசீரமைக்க சர்வதேச முயற்சிகள் தேவை என வலியுறுத்தினார். இந்தியா ஒரு வலுவான மையப்புள்ளியாக இருப்பதற்கான ஆதரவும் உதவியும் அளிக்கக் கூடிய அமெரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பங்கேற்கும் வாய்ப்புகளை வரவேற்றார். இருநாடுகளுக்கு இடையே ஆழந்த வணிக ஈடுபாடுகளைக் கொண்ட விளைவுகள் இயல்பிலேயே வளர்ச்சியடையும் வகையிலான தடையற்ற வர்த்த ஒப்பந்தம் தேவை என்பதையும் எடுத்துரைத்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மனிதவள முதலீட்டின் பங்கேற்புகளை அமெரிக்க அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அத்தகைய திறமைகளுக்கு தடையற்ற எல்லை அனுமதிகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கத் தூதர் ஜஸ்டர், கோவிட்டுக்குப் பிந்தைய உலகில் உள்நோக்கிப் பார்க்கப்படும் கொள்கைளின் ஆபத்து குறித்தும், இந்திய-அமெரிக்க வர்த்தக உறவில் பரந்த பயன்படுத்தப்படாத திறன் குறித்தும் தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இரு தரப்பிலும் செயல்படுத்தக்கூடிய உடனடியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சில கொள்கை மட்டத்திலான ஆலோசனைகளை தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் ஒவ்வொரு குழுவும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய தூதர் சாந்து, சீரமைப்புகளை மேற்கொள்ளும் கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவும் வகையிலான உள்ளீடுகளுடன் தனியார் துறையின் கண்ணோட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம் இந்திய-அமெரிக்க நட்புறவை வடிவமைப்பதில் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாகப் பாராட்டினார்.
தொடக்க நிகழ்வை அடுத்து, பொதுசுகாதாரம் மற்றும் மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கட்டமைப்பு மற்றும் உற்பத்தி , தொழில்முனைவு மற்றும் சிறுநிறுவனங்களை முன்னெடுத்தல், எரிசக்தி, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் ஐசிடி மறும் டிஜிட்டல் கட்டமைப்பு, நிதிச் சேவைகள் , வணிகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு பணிக்குழுக்களின் ஒவ்வொரு இணை பங்கேற்பாளரும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.
பணிக்குழுக்களின் இணைப் பங்கேற்பாளர்களின் வாசிப்புகளின் முடிவில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளர் மோஹபத்ரா, வர்த்தகம், முதலீடு மற்றும் இணைந்திருத்தல் ஆகியவற்றில் வலுவுக்கு மேல் வலுவாக இந்திய-அமெரிக்க இருநாட்டு உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
இருநாடுகளைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அரசுப்பிரநிதிகள் , இருநாடுகளின் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட முயற்சிகளை நோக்கி கடைமையாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அமெரிக்க அமைச்சர் ரோஸ் இருவரும், கோவிட்டுக்குப் பிந்தைய உலக ஒழுங்கில், பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இருதரப்பிலும் நல்லுறவை மேம்படுத்தவும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான தீர்மானத்தையும் வெளிப்படுத்தினர்.
*****
(Release ID: 1639073)
Visitor Counter : 278