உள்துறை அமைச்சகம்

துறவி ஆச்சார்ய ஶ்ரீ புருஷோத்தம்பிரியாதாஸ்ஜி சுவாமிஶ்ரீ மகராஜ் ஜி மறைவுக்கு மத்திய அமைச்சர் திரு.அமித் ஷா இரங்கல்

प्रविष्टि तिथि: 16 JUL 2020 1:11PM by PIB Chennai

லட்சக்கணக்கானோருக்கு அருளாசி வழங்கி ஒளியேற்றிய ஆச்சார்யஶ்ரீ புருஷோத்தம்பிரியாதாஸ்ஜி சுவாமிஶ்ரீ மகராஜ் ஜி மறைவுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவரது ஆன்மீக போதனைகள் மற்றும் சமுதாய நலனுக்காக ஆற்றிய தன்னலமற்ற சேவைகள் ஈடு இணையற்றவை என்று கூறியுள்ளார்.

ஆச்சார்யஶ்ரீ புருஷோத்தம்பிரியாதாஸ்ஜி சுவாமிஶ்ரீ மகராஜ் ஜி-யின் வாழ்க்கை, விழுமியங்களையும், ஞானத்தையும் கொண்டது என்றும்,  மனிதகுல நலனுக்காக  தன்னலமற்ற  வகையில் தமது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

மரியாதைக்குரிய துறவியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், அவரது உன்னதமான ஆன்மா அமைதியுடன் இளைப்பாறட்டும் என்றும், உலகம் முழுவதும் உள்ள அவரது  பக்தர்களுக்கு வலிமையை அளிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆச்சார்யஶ்ரீ புருஷோத்தம்பிரியாதாஸ்ஜி சுவாமிஶ்ரீ மகராஜ், மணிநகர் ஶ்ரீ சுவாமிநாராயண் காடி சன்ஸ்தானின் ஆன்மீக குரு ஆவார். அவர் இந்த அமைப்பின் துறவி  பரம்பரையின் ஐந்தாவது வாரிசு ஆவார். சுவாமிநாராயண் காடியின் தலைமை ஆச்சார்யாவாக அவர் இருந்து வந்தார்.

*****


(रिलीज़ आईडी: 1639065) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu