சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 20,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டதையடுத்து மீட்பு வீதம் 63.24 சதவீதமாக உயர்ந்தது
Posted On:
15 JUL 2020 5:35PM by PIB Chennai
கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வருவது கணிசமாக அதிகரித்துள்ளது. 20,572 பேர் குணமடைந்த நிலையில், கோவிட் - 19 நோயாளிகளில் மொத்தமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,92,031 ஆக அதிகரித்துள்ளது. இன்று வரை குணமடைந்தோர் விகிதம் 63.24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த விகிதம் அதிகரிக்க தீவிர பரிசோதனை, சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதல், நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டாலும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படாலும் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகியவற்றால் இது சாத்தியமானது. கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,19,840 பேர் மட்டுமே தற்போது நோயின் பிடியில் உள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுடன் ஆக்ஸிமீட்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி நோயாளிகளையும் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்ய ஏதுவாகிறது.
குணமடைந்தவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது இன்று 2,72,191 ஆக உள்ளது. நோயினால் குணமடைந்தவர்களின் விகிதம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை விட 1.85 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பில் 1378 அர்ப்பணிக்கப்பட்ட கோவிட் மருத்துவமனைகள் (DCH), 3077 அர்ப்பணிக்கப்பட்ட கோவிட் சுகாதார மையங்கள் (DCHC) மற்றும் 10351 கோவிட் பராமரிப்பு மையங்கள் (CCC) ஆகியவை அடங்கும். கோவிட்- 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மொத்தம் 21,738 வென்டிலேட்டர்கள், 46,487 ஐசியூ படுக்கைகள் மற்றும் 1,65,361 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன.
கோவிட் – 19 காலகட்டத்தில் திறமையான மருத்துவ நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு 230.98 லட்சம் N95 முகமூடிகள், 123.56 லட்சம் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் 11,660 வென்டிலேட்டர்களை மாநில / யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு விநியோகித்துள்ளது.
*********
(Release ID: 1638980)
|