சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நியுமோகோக்கல் பாலிசாக்கரைட் காஞ்சுகேட் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் (டி சி ஜி ஐ) ஒப்புதல்

Posted On: 15 JUL 2020 3:13PM by PIB Chennai

முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நியுமோகோக்கல்  பாலிசாக்கரைட் காஞ்சுகேட் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் (டி சி ஜி ஐ) ஒப்புதல் அளித்துள்ளது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. நியுமோகோக்கல்  பாலிசாக்கரைட் காஞ்சுகேட் தடுப்பு மருந்தை முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என மூன்று கட்டங்களில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக இந்த நிறுவனம் டி சி ஜி ஐ ஒப்புதலைப் பெற்றது. இந்தியாவில் இந்த மருத்துவ ஆய்வுகள் நடந்து முடிந்துவிட்டன. இந்த ஆய்வுகள் மற்றொரு நாட்டிலும் -- காம்பியாவிலும் நடத்தப்பட்டுவிட்டன.

 

இதன் பிறகு இந்த நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கு ஒப்புதலும், அனுமதியும் கோரி விண்ணப்பித்திருந்தது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமை அலுவலகம், தடுப்பு மருந்துகளுக்கான சிறப்பு நிபுணர்கள் குழுவுடன் இணைந்து, விண்ணப்பத்தையும் மருத்துவப் பரிசோதனைகள் பற்றிய தரவுகளையும் பரிசீலித்தது. இந்தத் தடுப்பு மருந்துக்கு ந்தை அங்கீகாரம் வழங்குவதற்கு அனுமதி அளிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரை செய்தது. முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள நியுமோகோக்கல்  பாலிசாக்கரைட் காஞ்சுகேட் என்ற இந்தத் தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான அனுமதி 14. 7. 2020 அன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமோனியா காய்ச்சல் தொடர்பான துறையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்தாகும் இது. இதற்கு முன்னர் இந்தத் தடுப்பு மருந்துக்கான தேவை, உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களாலேயே பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுமே, இந்தியாவிற்கு வெளியே உள்ள இடங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருபவை.

 

*****


(Release ID: 1638969) Visitor Counter : 267