பிரதமர் அலுவலகம்

கேதார்நாத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணி: பிரதமர் ஆய்வு

Posted On: 15 JUL 2020 2:17PM by PIB Chennai

கேதார்நாத் புண்ணியதலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணியையும், சீரமைப்புப் பணிகளையும் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். கேதார்நாத் கோயில், ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியார் சமாதி தலம் ஆகியவற்றை மேம்படுத்துவது மற்றும் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கவுரிகுந்த் – கேதார்நாத் பாதையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை உறுதிப்படுத்துவது, புனித யாத்திரையின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை தொழில்நுட்பம் வாயிலாக முன்னிலைப்படுத்துவது ஆகியவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

 

                                                                                                    ****



 



(Release ID: 1638747) Visitor Counter : 138