நிதி அமைச்சகம்
ராஜஸ்தான், தில்லி, மும்பையில் வருமானவரித் துறையின் சோதனைகள்
Posted On:
13 JUL 2020 10:40PM by PIB Chennai
இம்மாதம் 13-ந் தேதி அன்று, வருமானவரித்துறை பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. ஜெய்ப்பூரில் 20 வளாகங்களிலும், கோட்டாவில் 6 இடங்களிலும், தில்லியில் 8 இடங்களிலும், மும்பையில் 9 இடங்களிலும் வருமானவரித் துறையின் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹோட்டல், நீர்மின்சக்தித் திட்டங்கள், உலோக மற்றும் ஆட்டோ துறைகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு குழுமத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த வர்த்தக செயல்பாடுகளில் ஈட்டிய கணக்கு காட்டப்படாத வருவாய், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டாவது குழுமம், வௌ்ளி, தங்க நகை வர்த்தகம், பழமையான வௌ்ளிப் பொருட்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்களின் பெரும்பாலான வர்த்தகம் கணக்கில் காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்றாவது குழுமம் ஹோட்டல் துறையில் ஈடுபட்டுள்ளது. இதன் முதலீட்டுக்கான ஆதாரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது.
(Release ID: 1638493)
Visitor Counter : 188