சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 2.5 லட்சத்துக்கும் அதிகம்.
प्रविष्टि तिथि:
13 JUL 2020 5:35PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தொடர்ச்சியான தீவிரத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பலனாக குணமடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தீவிரமான சோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் கோவிட் பாதித்த நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் அவர்களுக்கு நோய் முற்றுவதற்கு முன்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது; கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொற்று பாதிப்பை கட்டுக்குள் வைத்துள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்துதல், ஆக்சிமீட்டர்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு, மருத்துவமனைக் கட்டமைப்புக்கு சுமை ஏற்படுத்தாமல், விதிமுறைகளின் படி தரமான கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய படிப்படியான கொள்கை மற்றும் முழுமையான அணுகுமுறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,850 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம், கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,53,470 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் விகிதம் இன்று 63.02 சதவீதமாக மேலும் முன்னேற்றமடைந்துள்ளது. குணைமடைந்தோர் தேசிய சராசரி விகிதத்தை விட 19 மாநிலங்களில் இது அதிகமாக உள்ளது. அவை வருமாறு;
|
மாநிலம்/யூனியன் பிரதேசம்
|
குணமடைந்தோர் விகிதம்
|
மாநிலம்/யூனியன் பிரதேசம்
|
குணமடைந்தோர் விகிதம்
|
|
லடாக் (UT)
|
85.45%
|
திரிபுரா
|
69.18%
|
|
தில்லி
|
79.98%
|
பிஹார்
|
69.09%
|
|
உத்தராகண்ட்
|
78.77%
|
பஞ்சாப்
|
68.94%
|
|
சட்டிஸ்கர்
|
77.68%
|
ஒடிசா
|
66.69%
|
|
இமாசலப் பிரதேசம்
|
76.59%
|
மிசோரம்
|
64.94%
|
|
ஹரியானா
|
75.25%
|
அஸ்ஸாம்
|
64.87%
|
|
சண்டிகர்
|
74.60%
|
தெலங்கானா
|
64.84%
|
|
ராஜஸ்தான்
|
74.22%
|
தமிழ்நாடு
|
64.66%
|
|
மத்தியப்பிரதேசம்
|
73.03%
|
உத்தரப்பிரதேசம்
|
63.97%
|
|
குஜராத்
|
69.73%
|
|
|
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 3,01,069 பேர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலோ, கோவிட் கவனிப்பு மையங்களிலோ, அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தலிலோ, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 2,51,861 அதிகமாகும். தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சையால், இந்தியாவின் இறப்பு விகிதமும் 2.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. தேசிய கோவிட்-19 தொலை ஆலோசனை மையம் மூலம் , தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்ந்து பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது. 30 மாநிலங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. அவை வருமாறு;
மாநிலம்/யூனியன் பிரதேசம் இறப்பு விகிதம்
|
மாநிலம்/ யூனியன் பிரதேசம்
|
இறப்பு விகிதம்
|
மாநிலம்/யூனியன் பிரதேசம்
|
இறப்பு விகிதம்
|
|
மணிப்பூர்
|
0%
|
ஜார்கண்ட்
|
0.8%
|
|
நாகாலாந்து
|
0%
|
பிஹார்
|
0.86%
|
|
தாத்ராநகர் ஹவேலி டாமன் டியூ
|
0%
|
இமாசலப்பிரதேசம்
|
0.91%
|
|
மிசோரம்
|
0%
|
தெலங்கானா
|
1.03%
|
|
அந்தமான் நிகோபார் தீவுகள்
|
0%
|
ஆந்திரப்பிரதேசம்
|
1.12%
|
|
சிக்கிம்
|
0%
|
புதுச்சேரி
|
1.27%
|
|
லடாக் (UT)
|
0.09%
|
உத்தராகண்ட்
|
1.33%
|
|
திரிபுரா
|
0.1%
|
தமிழ்நாடு
|
1.42%
|
|
அஸ்ஸாம்
|
0.22%
|
ஹரியானா
|
1.42%
|
|
கேரளா
|
0.39%
|
சண்டிகர்
|
1.43%
|
|
சட்டிஸ்கர்
|
0.47%
|
ஜம்மு காஷ்மீர் (UT)
|
1.7%
|
|
ஒடிசா
|
0.49%
|
கர்நாடகா
|
1.76%
|
|
அருணாசலப்பிரதேசம்
|
0.56%
|
ராஜஸ்தான்
|
2.09%
|
|
கோவா
|
0.57%
|
பஞ்சாப்
|
2.54%
|
|
மேகாலயா
|
0.65%
|
உத்தரப்பிரதேசம்
|
2.56%
|
கடந்த 24 மணி நேரத்தில், 2,19,103 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1,18,06,256. பத்து லட்சம் பேருக்கு சோதனை செய்யப்படும் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இன்று 8555.25 ஆக உள்ளது.
இந்தியாவில் 12000 பரிசோதனை ஆய்வகங்கள் என்ற அளவில் பரிசோதனைக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் - 852, தனியார் ஆய்வகங்கள் - 348. இதன் விவரங்கள்:
• உடனடி RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 626 (அரசு: 389 + தனியார்: 237)
• TrueNat அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 474 (அரசு: 428 + தனியார்: 46)
• CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள் : 100 (அரசு: 35 + தனியார்: 65)
கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA
தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை technicalquery.covid19[at]gov[dot]in என்ற தளத்துக்கு அனுப்பலாம். மற்ற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva என்ற தளங்களை அணுகலாம்.
கோவிட்-19 பற்றிய தகவல் ஏதேனும் தேவையென்றால், தொடர்பு கொள்ள வேண்டிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி மைய எண்கள்;+91-11-23978046 or 1075 ( கட்டணமில்லா தொலைபேசி). மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உதவி மைய எண்கள் பட்டியல் https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf என்ற தளங்களில் கிடைக்கும்.
****
(रिलीज़ आईडी: 1638369)
आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam